Breaking

இன்றைய ராசி பலன்கள் பற்றி அறிவோம்... 23-06-2020, ஆனி 09, செவ்வாய்க்கிழமை.






இன்றைய ராசி பலன்கள் பற்றி அறிவோம்...

23-06-2020, ஆனி 09, செவ்வாய்க்கிழமை.

இராகு காலம் மதியம் 03.00-04.30

எம கண்டம் காலை 09.00-10.30

குளிகன் மதியம் 12.00-1.30.


மேஷம்

குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபச் செலவுகள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக அதிக கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

தொழில் தொடர்பான பயணங்களால் அனுகூலம் உண்டு.எதிர்பாரத வகையில் திடீர் பணவரவு உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவை கொடுக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

மிதுனம்

உடல்நிலையில் சோர்வும், மந்த நிலையும் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கவனம் இருந்தால் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

கடகம்

மற்றவர்களுக்கு உதவும் வகையில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.


சிம்மம்

எடுத்த காரியத்தை முடிப்பதற்கு கால தாமதம் உண்டாகலாம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.

கன்னி

உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். முன்னேற்றமான நிலை காணப்படும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டு. குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் நீங்கும்.

துலாம்

வியாபாரம் தொடர்பான எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மன சங்கடங்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும்.

விருச்சிகம்

உறவினர்களால் சுபச் செலவுகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் உயர் அதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.


தனுசு

உங்களுக்கு மன உளைச்சல் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்தவரை தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உண்டாகலாம். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை செய்யாமலிருப்பது நல்லது.

மகரம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டு. வீட்டில் பிள்ளைகளால் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும்.

கும்பம்

வீட்டில் மங்கல நிகழ்வுகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்

வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் சிறு வேலையை செய்வதற்கு கூட அதிகம் உழைப்பு தேவைப்படும்.

No comments:

Powered by Blogger.