Breaking

ஜூலை 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை..டெல்லி




ஜூலை 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை..டெல்லி

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், டெல்லியில் ஜூலை 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை 50 சதவீதம் அளவுக்கு குறைக்கும் திட்டம் பற்றி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது புதிய சூழலுக்கு தகுந்தாற் போல் தயாராக திட்டம் உருவாக்கப்படும். எனவே மாணவர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள உதவும் வகையில் இந்த திட்டம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.