36 கிரகங்களில் ஏலியன்கள் இருக்க வாய்ப்பு!
36 கிரகங்களில் ஏலியன்கள் இருக்க வாய்ப்பு!
பூமியைப் போன்று வேறுகிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும் நமது பூமியில் இருப்பதைப் போல அறிவுமிக்க உயிர்கள் 36 வேறு கிரகங்களில் இருக்கலாம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.அதே நேரம் இவர்கள் எந்த கிரகங்களில் வாழ்கிறார்கள், அவர்களுக்கும் நமக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு என்ற கேள்விகளுக்கு இன்றளவும் விடை இல்லை.
இந்நிலையில் நாட்டிங்ஹாம் பல்கலை விஞ்ஞானிகள் சிலர் அண்ட பரிணாமக் கொள்கையின் அடிப்படையில் இந்த 36 ஏலியன் சமுதாயங்கள் இருக்கலாம் என்று கருதுகின்றனர்.'The Astrophysical Journal' என்ற வானியல் இதழில் இவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் விண்மீன் உருவாகுதல், அவற்றின் கனிமலோக அமைப்பு ஆகியவற்றை வைத்து ஆய்வு செய்ததில், மற்ற பால்வெளிகளில் பூமியைப் போன்று கோள்கள் பல இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர்.
No comments: