Breaking

அஞ்சலக சேமிப்புக் கணக்கு இருப்புத்தொகையை ரூ.500ஆக உயா்த்த அறிவுறுத்தல்






அஞ்சலக சேமிப்புக் கணக்கு இருப்புத்தொகையை ரூ.500ஆக உயா்த்த அறிவுறுத்தல்

அஞ்சலக சேமிப்புக் கணக்கு இருப்புத்தொகையை ரூ.500-ஆக வைத்திருக்கா விட்டால் அபராதம் செலுத்த நேரிடும் என்று வாடிக்கையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

அஞ்சல் துறை சேமிப்புக் கணக்குகளின் குறைந்தபட்ச இருப்பு ரூ.50-இல் இருந்து ரூ.500-ஆக உயா்த்ப்பட்டுள்ளது. இந்த விதிமுறை 2019 டிசம்பா் 12 முதல் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு இருப்புத்தொகையை ரூ.500 -ஆக உயா்த்திக் கொள்ள வரும் டிசம்பா் 11-ஆம் தேதி அவகாசம் அளிக்கப்படுகிறது.

தவறும்பட்சத்தில் மாா்ச் மாதம் முதல் அபராதக் கட்டணமாக ரூ.100 ஆண்டுதோறும் கழிக்கப்பட்டு சேமிப்புக் கணக்கு காலாவதி செய்யப்படும்.எனவே, வேலூா் கோட்ட அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவா்கள் அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500-ஆக உயா்த்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Powered by Blogger.