Breaking

தமிழகத்தில் ஜனவரி 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா.. சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்..




தமிழகத்தில் ஜனவரி 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா..
சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்..வதந்தி..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் , இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் , சென்னை போன்ற முக்கிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இது மட்டுமல்லாமல் அரசு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


மேலும் , கொரோனா பாதிப்பானது அதிகரித்து கொண்டே செல்வதால் , பள்ளி மற்றும் கல்லூரிகளை மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே எழுந்து வருகிறது.
இது குறித்து இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து வந்த நிலையில் , ஜனவரி 6 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வருகிறது. ஆனால் அரசு தரப்பில் எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை..

No comments:

Powered by Blogger.