தமிழகத்தில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டம்.
தமிழகத்தில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டம்.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. சென்னையில் உள்ள 15மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 3,717 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 5 மண்டலங்களில் தலா 2ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு.
வளசரவாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 1,043 ஆக அதிகரித்துள்ளது. நோய் கட்டுப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரம் செய்யப்பட்டு வருகிறது. கொத்தவால்சாவடி சந்தையை ஒரு வாரத்திற்கு மூட உத்தவிடப்பட்டுள்ளது.
அதிகம் பாதிப்புள்ள ராயபுரம் மண்டலத்தில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. கடைகளை மூடுவது தொடர்பாக வியாபாரிகளுடன், அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகம் பாதிப்புள்ள மண்டலங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளனர். சென்னைக்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நில நிர்வாக ஆணையர் பங்கஜ் குமார் பன்சால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
No comments: