Breaking

மாதம் ரூ.75 ஆயிரம் ஊதியம்.. ஒப்பந்த அடிப்படையில் கூடுதல் மருத்துவர் நியமனம்.







மாதம் ரூ.75 ஆயிரம் ஊதியம்.. ஒப்பந்த அடிப்படையில் கூடுதல் மருத்துவர் நியமனம்.

தமிழகத்தில் கூடுதலாக 1239 மருத்துவர்களை பணியில் நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்காக மேலும் 1,239 மருத்துவர்கள் உட்பட 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.574 முதுநிலை மருத்துவ பணியாளர்களை மாதம் ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் அரசு மருத்துவமனையில் பணியமர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் 665 மருத்துவர்களை அரசு மருத்துவமனையில் பணியமர்த்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.



1239 மருத்துவர்கள் உட்பட 2834 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் மூன்று மாதம் பணியாற்றுவார்கள் என்றும், இந்த அசாதாரண சூழலில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும், தேவைக்கேற்ப மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதாரத்துறையினர் நியமனம் அதிகரிக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.