Breaking

7 வயது சிறுமி குறித்து பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம் பிடிப்பு..






💥💥💥💥💥💥💥💥💥💥

காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியை சுத்தம் செய்து வரும் 7 வயது சிறுமி குறித்து பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு குப்பைகளை வீசி அசுத்தம் செய்கின்றனர். இதனால் ஏரியின் அழகு பாதிக்கப்பட்டதை பார்த்து வருத்தமடைந்த 7 வயது சிறுமி ஜன்னத், தனது தந்தையுடன் இணைந்து ஏரியை சுத்தப்படுத்தி வருகிறார். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதற்காக அவர் இந்த சேவையில் கடந்த 2 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார். 

பிரதமர் பாராட்டிய சிறுமி: 

முன்னதாக, ஏரியை சுத்தப்படுத்தும் சிறுமியின் முயற்சியை பிரதமர் மோடி பாராட்டியிருந்தார். படகு ஒன்றில் பயணிக்கும் அவர், ஏரியில் உள்ள குப்பைகளை வலைகளை வைத்து சேமித்து அப்புறப்படுத்துகிறார். சிறுவயதிலேயே சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு சேவையில் ஈடுபடும் சிறுமியின் பொதுநல அக்கறையை பாராட்டும் வகையில் ஹைதராபாத்தில் உள்ள பள்ளி ஒன்று ஜன்னத்தின் வாழ்க்கையை பாடப்புத்தக்கத்தில் சேர்த்துள்ளது.இதனை படிக்கும் மாணவர்களுக்கு அது முன்மாதிரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில், பாடப்புத்தக்கத்தில் சேர்த்துள்ளனர். 

இதுதொடர்பாக ஜன்னத் கூறுகையில், ‘ஏரியை சுத்தப்படுத்தும் எண்ணம் எனது தந்தையிடம் இருந்துதான் வந்தது. எனக்கு கிடைக்கும் அனைத்து புகழுக்கும் எனது தந்தையே காரணம்’ என்றார். பாடப்புத்தக்கத்தில் தனது மகள் குறித்து வந்துள்ளது மிகவும் பெருமையாக இருப்பதாக ஜன்னத்தின் தந்தை தாரிக் அகமது நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.