அன்றாட உணவில் தயிர் சேர்ப்பதனால் ஏற்படும் பயன்கள்.. இதோ 7 முக்கிய பயன்கள்..
அன்றாட உணவில் தயிர் சேர்ப்பதனால் ஏற்படும் பயன்கள்.. இதோ 7 முக்கிய பயன்கள்..
நாம் அன்றாடம் நம் வீட்டில் பயன்படுத்தபடும் உணவுகளில் தயிரும் ஒன்று. தயிர் ஆரோக்கியமான உணவு பொருள், மிகவும் குளிர்ச்சி தன்மையுடையது. அதுமட்டும் இல்லாமல் தயிர் பலவகையான சரும பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஒரு இயற்கை பொருளாக விளங்குகிறது.
அந்த காலத்தில் நமது முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகள் அனைத்துமே நோய் இல்லாமல் ஆயுல் நாட்களை அதிகப்படுத்தியது. மேலும் அவர்கள் உடலை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருந்தனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தது.
ஆனால் நாம் நம் முன்னோர்கள் உண்ண உணவுகளை எல்லாம் உதாசனம் படுத்திவிட்டு.இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாகரிகம் கருதி மேலை நாட்டு உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம்.
நம் முன்னோர்கள் உண்ண உணவில் தான் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கும் எந்த நோயும் அண்டாமல் வாழ்வதற்கும் சத்து உள்ளது என்று நினைப்பது இல்லை.
தயிர் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மற்றும் முகத்திற்கு எவ்வளவு நன்மைகள் உள்ளது என்று பார்க்கலாம்.
1)ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
2)தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
3)தயிர் போன்ற ப்ரோபையோடிக் உணவுகள் உண்பதால் நமது குடல் பகுதிகளில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாடுகள் அதிகரித்து, நமது உடலில் எந்த நோயும் தாக்காமல் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
4)கால்சியம் சத்து குறைபாட்டினால் எலும்புகளும், பற்களும் பாதிப்படையும். சிலருக்கு எலும்பு தேய்மானம் மூலம் மூட்டுவலி, நடக்கவே முடியாத அளவிற்கு இருக்கும். சிலருக்கு கால்சியம் சத்துக் குறைவினால் பற்களில் உறுதியற்ற தன்மை இருக்கும். இதனை சரிசெய்ய தினமும் நம் உணவில் தயிரினை சேர்த்துக்கொள்ளலாம். தயிரில் உள்ள கால்சியம் சத்தானது இதனை சரி செய்கிறது.
5)மனநலம் சம்பாந்தமான நோய்களையும் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
6)தயிர் உண்பதால் நமது மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நாம் பதற்றத்துடன் செயல்படுவதை தடுத்து, நிதானமாக செயல்பட உதவுகிறது.
7)சருமத்தில் அதிகளவு பருக்கள் ஏற்பட்டால் தயிரில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து, சருமத்தில் ஏற்பட்டுள்ள பருக்கள் மீது தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.
No comments: