Breaking

9வயது சிறுவனின் அசாத்திய கண்டுபிடிப்பு.., அதிகாரிகள் ஜனாதிபதி விருது வழங்க பரிந்துரை..





9வயது சிறுவனின் அசாத்திய கண்டுபிடிப்பு.., அதிகாரிகள் ஜனாதிபதி விருது வழங்க பரிந்துரை..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கென்யா நாட்டை சேர்ந்த 9 வயது சிறுவன் கைகளை பயன்படுத்தாமல் சனிடைசர் உபயோகப்படுத்தும் மரத்தாலான இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். கொரோனா வைரஸ் தனிமனித இடைவெளியை பயன்படுத்தி கைகழுவும் இயந்திரங்கள் குறித்த செய்திகளை தொலைக்காட்சியைப் பார்த்து உள்ளார். அச்சிறுவன் தன்னுடைய தந்தையிடம் நாமும் இதுபோல் ஒரு கைகழுவும் இயந்திரத்தை செய்யலாம் என்று கூறியுள்ளார்


தந்தை கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் அவர் நான்கு நாட்களில் மரத்தால் ஆன கைகழுவும் இயந்திரத்தை செய்துள்ளார். இந்த மெஷினை பயன்படுத்துவதற்கு இரண்டு கால்மிதிகள் அமைக்கப்பட்டுள்ளன ஒன்றைக் காலால் மிதித்தால் அதிலிருந்து சோப்பு திரவம் வெளிவரும்.அதை வைத்து கைகளை நன்றாக சோப்பு நீரால் கழுவி விட்டு இன்னொரு கால்மிதியை அழுத்தினால் அதிலிருந்து வரும் தண்ணீரால் மீண்டும் கைகளைக் கழுவிக் கொள்ளலாம். மரத்தை வைத்து இந்த கை கழுவும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது குறித்து தொலைக்காட்சியில் செய்தி வெளிவந்ததை அடுத்து அந்த வயது சிறுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.இந்த கண்டுபிடிப்பு அந்த ஊர் தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளியானது. இந்த செய்தி அந்நாட்டு அதிபர் வரை சென்றது. இந்த சிறுவனின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும் அரசு அதிகாரிகள் ஒன்று சேர்ந்து அச்சிறுவனை பாராட்டினார். இது குறித்து தகவல் அறிந்த கென்யா அதிபர் அந்த சிறுவனுக்கு ஜனாதிபதி விருது அளிக்க பரிந்துரை செய்துள்ளார்.

No comments:

Powered by Blogger.