Breaking

ஒரு நாடு ஒரு ரேஷன்... மத்திய அரசு உறுதி!




ஒரு நாடு ஒரு ரேஷன்... மத்திய அரசு உறுதி!

திட்டமிட்டபடி 2021 மார்ச் மாதத்துக்குள் ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டைத் திட்டம் நாடெங்கும் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டைத் திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ரேஷன் கார்டுகளைக் கொண்டு எந்தவொரு ரேஷன் கடையிலும் வாங்கிக்கொள்ளலாம். தற்போதைய நிலையில் மக்கள் தாங்கள் வாழும் இடத்துக்கு அருகில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். பிற மாநிலங்களிலிருந்து பிழைப்பைத் தேடி வரும் மக்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம் சென்ற ஆண்டின் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.


முதற்கட்டமாக தெலங்கானா - ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா - குஜராத் இடையே தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது 20 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், கோவா, ஜார்கண்ட், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டைத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஜூன் 1ஆம் தேதியில் நடைமுறைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் கூறியிருந்தார்

No comments:

Powered by Blogger.