Breaking

ஆரோக்கியமான வாழ....சம்மணங்கால் போடுவதன் அவசியம்...




ஆரோக்கியமான வாழ்க்கை !!
சம்மணங்கால் போடுவதன் அவசியம்...

👉 நாம் பொதுவாக எப்பொழுதும் காலைத் தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. 

👉 இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஓட்டம் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

👉 நமது கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதுமானது. மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேலே தான் இருக்கின்றன.

👉 உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் உங்கள் உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.

👉 எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள். வீட்டில் கட்டிலிலோ அல்லது ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்.


👉 சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்.

சாப்பிடும் முறைகள் :

♨ நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி, குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்கள்.

♨ எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்.

♨ பேசிக் கொண்டோ அல்லது தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது.

♨ சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்க வேண்டாம். சாப்பிட்டு முடித்த பின்பு மறக்காமல் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

♨ அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.

♨ பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்.


♨ பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.

♨ ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழக வேண்டும்.

♨ சாப்பாட்டுக்கு அரைமணி நேரத்திற்கு முன்பு பழங்கள் சாப்பிடுங்கள். சாப்பாட்டுக்கு பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.

♨ சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின் சிறிது தூரம் நடப்பது நல்லது.

ஆரோக்கியமாக வாழ சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுங்கள்..

No comments:

Powered by Blogger.