Breaking

கரீப் கல்யாண் திட்டம்- ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டம்... மத்திய உள்துறை அமைச்சர் தகவல்


கரீப் கல்யாண் திட்டம்-
ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டம்...
மத்திய உள்துறை அமைச்சர் தகவல்

ஆறு மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்கள், இந்த "ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டத்தின்" அங்கமாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். tamilsciencenews

கோவிட்-19 பெருந்தொற்றால் பிரச்சினைகளை சந்தித்து வரும் ஏழைகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டம் நிவாரணம் அளிப்பதுடன் அவர்களை மேம்படுத்தவும் செய்திடும் என்றும், ஆறு மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்கள், இந்த "ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டத்தின்" அங்கமாக இருக்கும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு அளிக்கவும், கிராமப்புற மேம்பாட்டுக்காகவும், கிராமப் பகுதிகளில் இந்திய அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரும் 25 வகையான வேலைகள்/செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள், இந்த பிரச்சாரத்தின் கீழ் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் என்றும் அவர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு தேடி நகர்ப்பகுதிகளை நோக்கிச் சென்ற மக்களுக்கு, தற்போது "ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டத்தின்" கீழ், அவர்களது வீடுகளுக்கு அருகிலேயே அவர்களது திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று திரு. அமித் ஷா கூறினார். கிராமப்பகுதிகளை மேம்படுத்துவதற்காக அவர்களது திறன் பயன்படுத்தப்படும் என்றும், இது கிராமப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதுடன், மேலும் வலுப்படுத்தும் என்றும் அமித் ஷா கூறினார். tamilsciencenews

மத்திய உள்துறை அமைச்சர் கூறும்போது, "நமது கிராமங்களை மேம்படுத்தவும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்வாதாரத்தையும், சுயமரியாதையையும் பாதுகாக்கவும் மோடி அரசு முழுமையான உறுதிபூண்டுள்ளது என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், "சுயசார்பு பாரதம்" என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த விவகாரத்தில் "ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டம்" முக்கியமான பங்கு வகிக்கும்," என்றார்.

No comments:

Powered by Blogger.