Breaking

சூரிய கிரகணமும். ராசி, நட்சத்திரத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரங்களும், வழிபாட்டு முறைகளும்.






சூரிய கிரகணமும். ராசி, நட்சத்திரத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரங்களும், வழிபாட்டு முறைகளும்.

இந்த கிரகணம் நாம் எதிர்பாராத வித்தியாசமான நேரத்தில் வருகிறது. கிரகண பரிகாரங்களுக்கு ஆண்டவனை நேரில் தரிசிக்க இயலாமல் மானசீக வழிபாடே வழியாக அமைகிறது. அமாவாசை திதியில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் ஆரம்பமாகிறது. இந்த கிரகணத்தை தமிழ்நாட்டில் உள்ளவர்களால் காண முடியும். மற்ற கிரகணங்களை விட பார்சுவ சூடாமணி சூரிய கிரகமான இந்த கிரகணம் பல மடங்கு புண்ணியங்களை வழங்கும்.

கிரகணத்தன்று பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய நட்சத்திரக்காரர்கள்: மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் பிறந்த அனைவரும் கிரகண பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். சித்திரை, அவிட்டம், திருவாதிரை, ரோகிணி நட்சத்திரங்களில் பிறந்த அனைவரும் கிரகண சாந்தி செய்து கொள்ள வேண்டும்.
வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு ஏற்றி நமச்சிவாய என்கிற மந்திரத்தை கிரகணம் முடியும் வரையில் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.


தீட்சை பெற்றவர்கள் இந்த கிரகணத்தின் பொழுது அனுட்டான நியமனங்களை செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் பயன்படுத்துகின்ற பொருட்களின் மீது தர்ப்பைப்புல்லை போட்டு வைத்திட வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரக்கூடாது. கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை எதுவும் சாப்பிடக்கூடாது. தண்ணீர்க்கூட அருந்தாமல் இருப்பது உத்தமம்.
முடிந்தால் நாக பிரதிஷ்டை செய்து (பஞ்சலோகம், அல்லது ஏதாவது கல் சிலையில் இருந்தால் கூட அதற்கு அபிஷேகம் பூஜை செய்வது நலத்தை உண்டாக்கும். இதனால் ராகு,கேது தோஷமும் நிவர்த்தியாகும். சிவ பூஜை செய்பவர்களுக்கு பூஜை செய்ய உத்தமமானது இந்த தருணம். சிவபூஜை செய்பவர்கள் சூரிய கிரகணத்தின் பொழுது செய்வது சிறப்பாகும்.

கிரகணம் முடிந்த பிறகு தங்கள் இல்லத்தைக் கழுவி மீண்டும் சுவாமி படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். பகல் 2மணிக்கு வீட்டை சுத்தபடுத்தி குளிக்க வேண்டும். பிறகுஅவரவர் சம்பிரதாயப்படி பூஜை செய்து கொள்ள வேண்டும்.

பகல் 2 மணிக்கு ஸ்நானம் செய்து தர்பணம் செய்யலாம். கர்ப்பிணிகள் சூரியகிரகண நேரமான காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை சூரியனை பார்த்திட வேண்டாம். 2 மணிக்கு சூரிய தரிசனம் செய்யலாம்.

No comments:

Powered by Blogger.