Breaking

இன்று சூரிய கிரகணம்.. நினைவில் கொள்ளுங்கள்.. இதையெல்லாம் செய்யக்கூடாது?!






இன்று சூரிய கிரகணம்.. நினைவில் கொள்ளுங்கள்.. இதையெல்லாம் செய்யக்கூடாது?!

வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம்  (ஞாயிற்றுக்கிழமை) ஜூன் 21ஆம் தேதி நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணம் மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரங்களில் நிகழ இருக்கிறது.

 சூரிய கிரகணம்... ஆரம்பம்... மத்திமம்... முடிவு நேரம் :

சூரிய கிரகணம் தமிழ்நாட்டில்,

காலை 10.22 மணிக்கு தொடங்குகிறது.

மதியம் 11.59 மணிக்கு உச்சத்தை அடைகிறது.

பிற்பகல் 01.41 மணிக்கு முடிவடைகிறது.
சூரிய கிரகணத்தால் தோஷம்... பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய நட்சத்திரங்கள்...!

ரோகிணி

மிருகசீரிஷம்

திருவாதிரை

அஸ்தம்

சித்திரை

சுவாதி

திருவோணம்

அவிட்டம்

சதயம்

ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.சூரிய கிரகணம் தொடங்கும் முன் என்ன செய்ய வேண்டும்?

கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும்.


உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.

சூரிய கிரகணத்தின்போது என்ன செய்ய வேண்டும்?

கிரகணத்தின்போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சூரிய கிரகணத்திற்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

சிவ பூஜை செய்பவர்களும் கிரகணத்தின்போது பூஜை செய்வது நல்லது.

சூரிய கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

என்ன செய்யக்கூடாது?

கிரகணத்தின்போது உணவு சாப்பிடக்கூடாது.

அசைவம் சாப்பிடக்கூடாது.

கிரகணத்தின் போது பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.

கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். பெண் இந்த சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.

புனிதமான செயல்களை செய்யக்கூடாது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு :

கர்ப்பிணி பெண்கள் கிரகண காலம் முடியும் வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

நகம் வெட்டக்கூடாது.

கர்ப்பிணிப் பெண்கள் சூரிய கிரகணத்தைப் பார்க்கக்கூடாது.

கிரகணத்தின்போது உறங்கக்கூடாது.

மேலும், கிரகண நேரத்தின்போது வெளியே சென்றால் அவருக்கும், அவர்களுடைய குழந்தைக்கும் பாதிக்கக்கூடியதாக சில கதிர்வீச்சுக்கள் ஏற்படும். இதனால் பிறக்கும் குழந்தைக்கு சில ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

சூரிய கிரகணம் முடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?

கிரகணம் முடிந்ததும் வீட்டை சுத்தம் செய்வது அவசியம்.

மேலும், பூஜையறையை சுத்தம் செய்து, சுவாமி படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்படும் எந்த உணவையும் உண்பது சில உபாதைகளை உருவாக்கும் என்பதால் புதியதாக உணவை சமைத்து சாப்பிடவும்.

கிரகணம் முடிந்த பிறகு குளித்து முடித்துவிட்டு கோவிலுக்கு சென்று விட்டு, பிறகு உணவு சாப்பிடலாம்.

ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது.

No comments:

Powered by Blogger.