Breaking

தமிழ் நாடு அரசுக்கு தமிழ் நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்





தமிழ் நாடு அரசுக்கு தமிழ் நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

1. உடனடியான முன்னுரிமை அடிப்படையில் கிராம அளவில்/ நகர்ப்புற அளவில்  அங்கன்வாடியை மையமாக வைத்து அனைத்து குழந்தைகளுக்கும் தனியார்,சின்னஞ்சிறு நர்சரி முதல்  உயர்நிலைப்பள்ளி வரை உடனடியாக சத்துணவு வழங்க வேண்டும்.

2. தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும்  மாணவர்களுக்கும் தமிழக அரசு இதுவரை எந்த வழிகாட்டுதலும் வழங்கவில்லை. ஆனாலும் தன்னிச்சையாக, தனியார் பள்ளிகள் மிகத் தீவிரமாக  இணைய வழிக் கற்றலை முன்னெடுத்து வருகின்றன.  இது தமிழக அரசுக்கும், ஒரு வகையில்  இந்திய அரசியல் சாசனத்தின் மாண்புகளுக்கும் எதிரானது.

எனவே  தனியார் பள்ளிகளின் இணையவழி வகுப்புகள், மாணவர் சேர்க்கை மற்றும் கட்டண வசூலை  உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.



3. பாடப் புத்தகங்களைக் குழந்தைகளின் கரங்களில் உடனடியாகச் சேர்ப்பதை உத்திரவாதம் செய்ய வேண்டும்.

4. இணைய வழி அல்லாத தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னரே இளையான்குடி, திருவரங்குளம் ஒன்றியங்களில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம்   துளிர் அறிவொளி என்ற திட்டத்தின் மூலம்  நன்கு பரிசோதனை செய்து, வெற்றிகண்ட சிட்டுக்கள் மையம் போன்ற மாற்று வகுப்பறைக்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

 அதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை பள்ளிக்கல்வித்துறை  அழைத்து பேசினால் உதவ தயாராக இருக்கிறோம்.  

5. தொலைக்காட்சி போன்ற வெகுமக்கள் ஊடகங்களைப் பயன்படுத்தி பேரா.நன்னன் தமிழ் கற்பிப்பத்ததைப் போல, தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது போல பள்ளிகள் திறக்கும் வரை கற்றல்  செயல்பாடுகளுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தும் வகையிலான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து செயல்படுத்த வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கல்விக்கான வல்லுநர் குழு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

No comments:

Powered by Blogger.