Breaking

கேரட் ஜூசால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் இத்தனையா?.. இன்றே குடிங்கள்.





கேரட் ஜூசால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் இத்தனையா?.. இன்றே குடிங்கள்.

தினமும் பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வரும் நமக்கு, நமது உடல் நலம் குறித்த ஆரோக்கியமும் முக்கியமான ஒன்றாகும். நமது உடலுக்கு தேவையான சத்தான பொருட்களை சாப்பிட்டால் மட்டுமே எதிர்காலத்தில் நல்ல உடல்நிலையுடன் இருக்க இயலும். இன்று கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம்.

வயிற்றில் புண் இருக்கும் நபர்களுக்கு கேரட் சாறு நல்ல மருந்தாக பயன்படும். கல்லீரல் தொடர்பான பிரச்சனை இருக்கும் நபர்களுக்கு, கல்லீரல் இயக்கத்தை சரி செய்ய உதவுகிறது. சருமத்திற்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது.


கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் காரணமாக கண் பார்வை குறைபாடு சரி செய்யப்படுகிறது. பீட்டா கரோட்டினில் இருக்கும் வைட்டமின் ஏ சத்தின் காரணமாக, கண்பார்வை குறைபாடுகளை சரி செய்யவும், கண்பார்வை குறைபாடுகள் வராமல் தடுக்கவும் பயன்படுகிறது.உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை சரி செய்யவும் உதவுகிறது. கோடைகாலங்களில் அடிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து, உடலின் சூடு குறைந்து குளிர்ச்சி பெறவும் கேரட் சாறு உதவி செய்கிறது.

பார்வை குறைபாடு, சீரான சரும வளர்ச்சி, முடி வளர்ச்சி, அல்சர் பிரச்சனை, நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனையால் அவதியுற்று வரும் நபர்களுக்கும் கேரட் சாறு நல்ல உதவி செய்யும்.

கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் அல்பா கரோட்டின், லுட்டின் போன்ற சத்துக்கள் காரணமாக இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்க இயலும். வைட்டமின் ஏ-வில் இருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம் புற்றுநோய் செல்களை அளிக்கிறது.

No comments:

Powered by Blogger.