Breaking

ஒலிபெருக்கிி மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அரசு பள்ளி..






ஒலிபெருக்கிி மூலம்
மாணவர்களுக்கு பாடம் நடத்தும்
அரசு பள்ளி..

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த வசதி இல்லாததால், ஒலிபெருக்கி மூலம் அரசு பள்ளி ஆசியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி குறித்து பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வருகின்றனர். ஆனால் செல்போன்கள், இணைய வசதிகள் இல்லாத வீடுகளில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதிலும் சிரமம் இருக்கிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள் சிலர் தற்கொலை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் அவ்வப்போது செய்தி வெளியாகி வருகிறது.


இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் பன்கத்தி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியரான ஷ்யாம் கிஷோர் சிங் காந்தி வித்தியாசமான முயற்சி மேற்கொண்டுள்ளார்.
மாணவர்களின் வீடுகளில் செல்போன், இணைய வசதி இல்லாததால் கிராமம் முழுவதும் ஒலிபெருக்கிகள் அமைத்துள்ளார். இதனை பயன்படுத்தி 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். தினமும் இரண்டு மணி நேரம் இந்த வகுப்புகள் நடைபெறுகிறது. மாணவர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் எல்லாம் ஒலிபெருக்கிகள் அமைத்துள்ளனர். வகுப்பறையில் இருந்து மைக் மூலமாக பாடம் நடத்தும் பணியில் ஐந்து ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


இதுகுறித்து தலைமை ஆசிரியர் காந்தி கூறுகையில், 'எங்கள் பள்ளியில் படிக்கும் 246 மாணவர்களில் 204 பேரின் வீடுகளில் செல்போன் கிடையாது. அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒலிபெருக்கி மூலம் பாடம் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மாணவர்களுக்கு பாடத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் யாரிடமாவது செல்போன் வாங்கி மெசேஜ் செய்வார்கள். அதற்கு அடுத்த நாள் ஒலிபெருக்கியில் அதற்கான விளக்கம் ஆசியர்களால் அளிக்கப்படும்' என்றார்.

இந்த புதிய முறை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிராமப்புறங்களில் செல்போன் வசதி இல்லாத இடங்களில் இதுபோன்ற முறையை பின்பற்றி வகுப்புகள் நடத்தினால் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.