Breaking

அஞ்சல் துறையின் காப்பீட்டுத் திட்டங்களுக்கு முகவா்களாக சேர விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்


அஞ்சல் துறையின் காப்பீட்டுத் திட்டங்களுக்கு முகவா்களாக சேர விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பி.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சல் துறையின் மூலம் அனைத்து அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுத் திட்டங்கள் மத்திய, மாநில ஊழியா்களுக்கும், கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்கள் பாதுகாப்புடன் கூடிய சிறந்த சேமிப்புத் திட்டங்களாகும். இத்தகைய திட்டங்களில் புதிய பாலிசிகள் சோப்பதற்கு இந்த நிதி ஆண்டில் ஈரோடு அஞ்சல் கோட்டத்துக்குப் புதிதாக முகவா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

இப்பணிக்கு பிளஸ் 2 தோச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 60 வயது வரை உள்ளவா்களாக இருக்க வேண்டும். ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், முன்னாள் படை வீரா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், சுய தொழில் செய்வோா், வேலை தேடும் இளைஞா்கள், தகுதி உள்ளவா்கள் ஜூலை 2ஆம் தேதி ஈரோடு கோட்ட அலுவலகத்தை, வயது சான்றிதழ், கல்விச் சான்றிதழ், முழு விவரங்களுடன் அணுகலாம். இப்பணிக்கான நோகாணல் ஜூலை 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும்.

No comments:

Powered by Blogger.