Breaking

பெண்களே இனி காய்கறிகள் நீங்க கழுவ வேண்டாம்.. கழுவி கிருமிநீக்கம் செய்யும் புதிய கருவி...






பெண்களே இனி காய்கறிகள் நீங்க கழுவ வேண்டாம்.. கழுவி கிருமிநீக்கம் செய்யும் புதிய கருவி...


காய்கனிகளை தண்ணீரில் மட்டுமே அலசிவிட்டு சுத்தப்படுத்தி விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பாக்டீரியா, பூஞ்சை போன்ற கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் படிமங்கள் சுத்தப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் அத்தகைய நுண்கிருமிகளையும் சுத்தப்படுத்த வேண்டிய அவசியத்தை நாம் இன்று உணர்ந்து கொண்டுள்ளோம்.

குறிப்பாக இந்திய வீடுகளில் சந்தைகளில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தப்படுத்திப் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகி உள்ளது. tamilsciencenews

ஆனால், காய்கறிகள் மற்றும் பழங்கள் நன்றாக சுத்தப்படுத்தப்பட்டு விட்டன என்று எப்படி உறுதி செய்வது?
அப்படி கிருமிநீக்கம் செய்வதற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா ?

வாடிக்கையாளர்களின் தேவையை முன்பறியும் பிரெஸ்டீஜ் கிளீன்ஹோம் உங்களுக்காகவே வடிவமைத்து வழங்குகிறது புதிய காய்கனி தூய்மையாக்கி சாதனம்.

இத்தகைய நுண்கிருமிகளையும், படிமங்களையும் நீக்கி மிகத் தூய்மையான காய்கள் மற்றும் கனிகளை நாம் உணவாகப் பயன்படுத்துவதற்காகவே காய்கனி சுத்தப்படுத்தும் சாதனத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக பிரெஸ்டீஜ் கிளீன்ஹோம் தெரிவித்துள்ளது.

நவீன ஓசோன் பியூரிஃபிகேஷன் தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது இந்த சாதனம். உணவுப் பொருள்களை சுத்தப்படுத்தும் அதேவேளையில் அவற்றின் ஊட்டச்சத்துக்களும் இம் முறையில் பராமரிக்கப்படுகிறது.


பருப்பு வகைகள், இறைச்சி மற்றும் கடல் உணவுகளை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. உணவுப் பொருள்களின் மணமும் சுவையும் மாறாமல் முழுமையாக சுத்தப்படுத்துவதுடன் அவற்றின் பயன்படுத்தும் நாட்களும் அதிகரிக்கிறது. tamilsciencenews

முதலில் குழாய் தண்ணீரில் காய்கறிகள் மற்றும் பழங்களைக் கழுவி, ஒரு பாத்திர நீரில் மூழ்கி வைக்கவும். பின்னர் சாதனத்தை ஏர் ஸ்டோன் குழாயை பாத்திரத்திற்குள் வைக்கவும். சாதனத்தில் 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை செட் செய்யவும். அதிக வோல்டேஜ் மின்சாரம் உருவாக்கும் ஓசோன்கள் கிருமிகள் மற்றும் ரசாயனங்களை சுத்தப்படுத்தும்.

இந்த சாதனம் மெல்லிய மற்றும் நவீன வடிவம் கொண்டுள்ளதால் சுவற்றில் பொருத்தவோ, நிறுத்திவைக்கவோ முடியும். கைகளிலும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். பராமரிக்கவும், பயன்படுத்தவும் எளிதானது.

இந்த சாதனத்தின் விலை ரூ.4,695 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னணி டீலர்களிடமும், பிரத்யேக பிரெஸ்டீஜ் ஸ்டோர்களிலும், முன்னணி ஆன்லைன் வர்த்த இணையதளங்களிலும் இந்த சாதனம் விற்பனை செய்யப்படுகிறது. tamilsciencenews

வாங்கிப் பயன்படுத்துங்கள். உணவுப் பொருள்களில் சுகாதாரத்தையும் உடலின் ஆரோக்கியத்தையும் பராமரியுங்கள்.

No comments:

Powered by Blogger.