Breaking

சொத்தை பல் வந்தால் பல்லில் கருப்பு நிறம் ஏன் ஏற்படுகிறது?






சொத்தை பல் வந்தால் பல்லில் கருப்பு நிறம் ஏன் ஏற்படுகிறது?

பல்லின் எனாமல் பகுதிக்குள் Tubules இருக்கிறது. இதன் வழியாகவே பல்லுக்கு சத்து கிடைக்கிறது. பல்லில் உற்பத்தியாகும் பாக்டீரியாக்கள் ட்யூபுள்ஸினை அடைத்துவிடும். எனவே, ட்யூபுள்ஸ்க்கு உணவு கிடைக்காமல் போவதால் அந்த இடம் அழுகிப் போகும். அதனால்தான் கருப்பு நிறமாக காட்சி தருகிறது.



சொத்தைப் பல் சிகிச்சைக்குப் பிறகும் மருத்துவரின் ஆலோசனை அவசியமா?

சொத்தைப்பல்லை அடைத்தாலும் 6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரிடம் போய் பரிசோதித்துக் கொள்வது நல்லது. அப்படியே விட்டுவிட்டால் 2 அல்லது 3 வருடம் கழித்து பாதிக்கப்பட்ட இடத்திலேயே, மீண்டும் சொத்தை பல் வர வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், அடைக்கப்பட்ட இடத்தில் சிறிய ஓட்டை ஏற்பட்டாலும் கூட அதில் போய் ஏதேனும் உணவுப்பொருட்கள் புகுந்திருந்தால் கூட மீண்டும் சொத்தை பல் வந்துவிடலாம்.

No comments:

Powered by Blogger.