Breaking

செம்பு பாத்திரம் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்...





செம்பு பாத்திரம் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்...

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்யவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளுக்கு மேலே உள்ள பின்பற்றவும் பட்டனை அழுத்தவும்.ஒரு லைக் செய்தால் தான் என்னால் அடுத்த கட்டுரைகளை போஸ்ட் செய்ய இயலும்.

சொம்பு உலோகத்தால் உருவாக்கப்பட்ட கதவுகளில் வைரஸ்களும் , பாக்டீரியாக்களும் 2 மணி நேரம் வரை உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செப்பு பாத்திரங்களுக்கும் அது பொருந்தும். ஆனால் பிளாஸ்டிக் பாட்டில்களில் மூன்று நாட்கள் வரை வைரஸ்கள் உயிர் வாழ்வது தெரியவந்துள்ளது.அதனால் பாக்டீரியா வைரஸ் போன்ற தொற்று கிருமிகளுக்கு எதிர்ப்பு பொருளாக செப்புப் பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு, சுகாதார அமைப்புகள் பரிந்துரை செய்துள்ளனர்.பண்டைய காலத்தில் செப்புப் பாத்திரங்களை முன்னோர்கள் பயன்படுத்தியதற்கான காரணம், அறிவியல் பூர்வமாக இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

செப்பு பாத்திரத்தில் இருக்கும் ஒருவகை தாதுக்கள் தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் மற்றம் வைரஸ்களை அழித்து விடுகிறது.தற்போது இன்றும் பெரும்பாலான வீடுகளில் செப்புப் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே அதனை பயன்படுத்துவதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 229 ஈ என்னும் ஒரு வகை வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சுவாச குழாயில் நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் இந்த வகை வைரஸ் நுரையீரலை பாதிக்கும் தன்மை கொண்டது.இந்த நோயை பரப்பும் வைரஸ் பீங்கான், கண்ணாடி, சிலிகான் ரப்பர் போன்ற பொருள்களில் நீண்ட நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது. ஆனால் செப்புப் பாத்திரங்களில் இந்த வைரஸ் விரைவாகவே செயலிழந்து விட்டது. செப்புப் பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்து பிறகு நாம் அதனைப் பருகினால் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் உடையது. மேலும் அந்த தண்ணீரை குடிப்பதன் மூலமாக, நம் உடலில் உள்ள தேவையற்றக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.


பாக்டீரியா, வைரஸ் , பூஞ்சை போன்றவை இந்த செம்பு பாத்திரங்களில் படித்து இருந்தால் விரைவாக செயலிழந்துவிடும் என்பது புதிய ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. செப்பு உலோகத்திற்கு கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அதனை தினமும் பயன்படுத்தலாம். தினமும் அந்த பாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து பருகினால் போதும். உடலில் உள்ள தேவையற்ற பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்து விடும். அதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு நலம் சேர்க்கக் கூடியவை. மேலும் நமது சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

முதிய தோற்றம் ஏற்படுவதை இது தடுக்கும்.ஸ்டீல் பாத்திரங்களை விட செப்புப் பாத்திரங்கள் 20 மடங்கு நமக்கு வெப்பத்தை கடத்தும் தன்மை கொண்டது. சீரான வெப்ப நிலையை கடத்தி உணவை சமைக்க வைக்கவும் இது உதவும். தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்களால் செப்புப் பாத்திரங்களில் உயிர்வழ முடியாது, என்பதால் உணவில் இருந்து கிருமிகள் பரவுவதைத் தடுக்கிறது. செப்புப் பாத்திரங்களை சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் பயன்படுத்தலாம்.பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் பெரும்பாலும் செப்புப் பாத்திரங்களை பயன்படுத்தி வந்தனர்.

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்யவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளுக்கு மேலே உள்ள பின்பற்றவும் பட்டனை அழுத்தவும். ஒரு லைக் செய்தால் தான் என்னால் அடுத்த கட்டுரைகளை போஸ்ட் செய்ய இயலும்.

No comments:

Powered by Blogger.