Breaking

தினமும் வெறும் வயிற்றில் துளசி பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அறிவோம்..






தினமும் வெறும் வயிற்றில் துளசி பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அறிவோம்..

இப்போது பல வீடுகளிலும் புனித செடியாக வளர்க்கப்படும் துளசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. இந்த விஷயம் அனைவரும் அறிந்ததே. துளசி பல பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியது. அதற்கு துளசியை வெறுமனே வாயில் போட்டு மென்று சாப்பிடுவதைத் தவிர, பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, அதன் மருத்துவ பண்புகள் அதிகரித்து, உடல் ஆரோக்கியம் பல வழிகளில் மேம்படும். 

துளசியில் யூஜெனோல் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கிறது . இது இதய ஆரோக்கியத்தை பேணி கொள்ளவும் , சிறப்பாக செயல்படவும் வைக்கிறது . மேலும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உடலில் ஆக்ஸிஜனேற்றத்தை மேம்படுத்துகிறது. அதோடு, பால் சிக்கலைத் தடுத்து இதயத்திற்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அளிக்கின்றது.

No comments:

Powered by Blogger.