Breaking

அறிவாற்றலுக்கான வள ஆதாரங்களை இந்திய மொழிகளில் உருவாக்குதல்

அறிவாற்றலுக்கான வள ஆதாரங்களை இந்திய மொழிகளில் உருவாக்குதல்அந்த வழிகாட்டுதல்களை புறக்கணிப்பவர்கள் தங்கள் உயிரையே இழக்க நேரிடுகிறது என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். அறிவியல் என்பது அங்கீகாரத்தின் அடிப்படையைக் கொண்டுள்ளது. அது இயற்கையானது குறிப்பிட்ட நோக்கங்களாலும், பொதுமுறையான சட்டதிட்டங்களாலும் நிர்வகிக்கப்படுகிறது. அதுவே மானிட கற்பனை வளத்தை மீறச் செய்கிறது.
அரசியல் சித்தாந்தம், தார்மீக பற்று, கலாச்சாரபேரினவாதம் மற்றும் கண்மூடித்தனமான உணர்வுபூர்வநிலையால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் நாட்டில் இவையனைத்தும் மக்களின் மனங்களில் ஆற்றலுடன் பதிந்துள்ளன.அறிவியல் ரீதியான புறநிலை வாதத்தின் வலுவான அளவுஒன்று மட்டுமே அத்தியாவசியமாக தேவைப்படும் சமச்சீர் நிலையைக் கொண்டு வரமுடியும்.
மேற்கத்திய உலகில் அறிவியலின் பிரபலத்துவம் தொடர்ந்து எழுச்சி நிலையை எட்டி வருகிறது. அது வெகுஜன மனிதனின் வீட்டு வாசற்படியிலேயே அறிவியலின் புரிதலை கொண்டு வரும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில், இத்தகைய பாரம்பரியம் ஒருவகையில் உடைந்து நொறுங்கி போய் விட்டது.அதிலும் இந்திய மொழிகளில் இது புறக்கணிக்கக் கூடியதாகி விட்டது. இதை கருத்தில் கொண்டு15 ஆண்டுகளுக்கு முன்பு, நான் உயர்நிலைப்பள்ளி கல்வி பயிலும் மாணவர்களை இலக்காக கொண்டு தெலுங்கு மொழியில் புத்தகங்கள் எழுதத் தொடங்கினேன்.

எனது முயற்சியானது ஐஸாக் அஸிமோவ் எழுதிய “ஹவ் டிட் வீ ஃபைண்ட் அவுட்”தொடரின் 30 பிரபலமான குறு விஞ்ஞான புத்தகங்களை மொழி பெயர்ப்பதில் தொடங்கியது. நியூட்டன், ஐன்ஸ்டீன், ஸ்ரீநிவாஸ ராமானுஜன், ஜகதீஷ் சந்திர போஸ் மற்றும் கலீலியோ ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டன. சார்லஸ் டார்வினின் சுயசரிதை மொழி பெயர்க்கப் பட்டது.
அறிவியல் கற்பனைக் கதைகள் இளம்வாசகர்களை விஞ்ஞானத்தால் தூண்டுவிக்கக் கூடிய ஓர் மகத்தான வழியாகும். நான் ஜூல்ஸ் வெர்னேயின் ஜர்னி டு த சென்டர் ஆஃப் எர்த்தையும், ஆர்தர் கிளார்க் எழுதிய ஜூபிடர் ஃபைவ் எனும் சிறுகதைத் தொகுப்பை தெலுங்கு மொழியில் மொழி பெயர்ப்பு செய்தேன்.
இளம் வாசகர்களைக் கவரும் நோக்கில் ஆகாச வீதிலோ அபரன்ஜிபொம்மா எனும் ஒரிஜினல் ஸை-ஃபை நாவலையும் எழுதினேன். இந்த நாவலில் முக்கிய கதாபாத்திரம் 7-வதுவகுப்பு அமோக் என்ற பையனும் விஸ்ஸூ என்ற பெயருள்ள பெடிட் ரோபோவும் இடம் பெற்றனர். அவர்கள் ஒன்று சேர்ந்து தீய ரோபோ கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட அமோகின் தங்கை அனுக்யாவை ஸோலார் ஸிஸ்டம் முழுவதிலும் வழி தெரியாமல் தேடி கண்டுபிடிக்கும் ஜெட் பயணத்தை விவரித்தேன். அவர்களின் பயணம் மேக கூட்டத்தின் நடுவில் உள்ள வீனஸ் கிரகத்தின் ஓர் விசித்திரமான நகரை சுற்றி நிகழ்ந்தது.
அறிவியல் வரலாறு விஞ்ஞான கருத்துகளை உருவாக்குவதற்கான ஆழ்ந்தஉட்கருத்தை அளிக்கிறது. அறிவியல் வரலாறுகளில், அமிஸோவ் எழுதிய ஹிஸ்டரி ஆஃப் பயாலஜி அண்ட் கெமிஸ்ட்ரி புத்தகங்களை நான் தெலுங்கு மொழியாக்கம் செய்தேன். அதோடு ஹிஸ்டரி ஆஃப் ஆஸ்ட்ரோனமி என்ற புத்தகத்தையும் நான் எழுதினேன். அதில் பண்டைய உலகின் ஆஸ்ட்ரானமி முதல் நியூடேனியன் புரட்சி வரை அனைத்தும் இடம் பெற்றது.
ராக்கெட்ரி பற்றிய வரலாற்றையும் நான் எழுதினேன். அதில் டேடாலூஸ் மற்றும் ஐகாரஸ் மேற்கொண்ட தொல்வி முயற்சிகள் தொடங்கி மங்கள்யான், சந்திராயாண் மற்றும் இன்டர்ஸ்டெல்லர் டிராவலின் அற்புதமான கண்ணோட்டங்களும் உள்ளடங்கியிருந்தன. அண்மையில் நான் மேற்கொண்டமொழிபெயர்ப்பு முயற்சிகளில் காரல் செகனின் காஸ்மோஸ் புத்தகமும் உள்ளடங்கும். இந்த மொழி பெயர்ப்பானது ஆன்ட்ரூயான் டிரஸ்ட் அளித்த அன்பான பேராதரவால்தான் சாத்தியமாயிற்று.
அறிவியல் சரித்திரங்களை எழுதுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியானது ஜெனரல் வேர்ல்ட் ஹிஸ்டரி மற்றும் இதிகாசங்களில் எனது ஆர்வத்தை தட்டி எழுப்பியது. இந்தியாவில் பாமர மனிதன் புராணத்தை வரலாற்றுடன் ஒப்பிட்டு குழம்பி விடுகிறான். அதனால் ராமனையும், அசோகனையும் ஒரே சரித்திர காலகட்டத்தில் நிறுத்திப் பார்க்கிறான். அநேகமாக இது இந்திய மொழிகளில் உலக புராண கதைகளை விசாலமான இலக்கியமாக உருவாக்க உதவக் கூடும். ஒரு சின்னஞ்சிறு மீன் குஞ்சாக நான் அதே திசையில் கிரேக்க இதிகாசங்களின் மூன்று பாரம்பரிய கதாநாயகர்களான ஹெர்குலிஸ், பெர்ஸியுஸ் மற்றும் ஜேஸன்பற்றி ஒரு புத்தகம் எழுதினேன்.
பிரபல சிந்தனையில் பண்டைய வம்சாவளியில் இந்தியா வகிக்கும் இடம் ஈடிணையற்றதாகும். அந்த கருத்தே கலாச்சார பேரின வாதத்தை கொழுந்து விட்டு எரியச் செய்கிறது. உலகின் இதர கலாச்சாரங்கள் மற்றும் நமது சொந்த கடந்த காலம் மற்றும் மற்றவர்களின் கடந்த காலம் குறித்து பாராட்டும் நோக்கம் அதிகமாக இருப்பது அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு நான் அண்மையில் பண்டைய ரோம நாகரீகத்தின் சரித்திரத்தை தெலுங்கில் எழுதினேன். அதில் கிறீஸ்து பிறப்புக்கு முன் 7-ம் நூற்றாண்டு தொடங்கிகிறீஸ்துபிறந்த பிறகு5-ம் நூற்றாண்டின் இறுதியில் மேற்கு ரோம பேரரசின் வீழ்ச்சி வரை அனைத்து நிகழ்வுகளையும் விவரித்திருக்கிறேன். 360 பக்கம் கொண்ட இப்புத்தகம் தற்போது பிரசுரிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க கல்வியாளர் ஜான் ஹோல்ஃட் எழுதிய லேர்னிங் ஆல் த டைம் மற்றும் ஹவ் சில்ட்ரன் லேர்ன் ஆகிய இரண்டு புத்தகங்களையும் நான் மொழியாக்கம்செய்துள்ளேன். ஹோல்ட்டின் எழுத்துக்கள் 80-களில் அமெரிக்க கல்வி முறையில் பெரும் தாக்கத்தை எழுப்பியதோடு ஹோம் ஸ்கூலிங் இயக்கத்தில் மிகப் பெரும் தூண்டுலையும் உருவாக்கியது. ஒட்டுமொத்தமாக, நான் மேற்கொண்ட எழுத்து முயற்சியானது,. 6,000 பக்கங்கள் கொண்ட 75 புத்தகங்கள் ஆகும்.
இதேபோன்று எழுத்து முயற்சியானது தமிழிலும் IIT மெட்ராஸின் முன்னாள் மாணவர் டாக்டர் பிரகதி ஒன்றிணைப்போடு நடைபெற்றது. இம்முயற்சியின் விளைவால் அமிஸோவ் எழுதிய ஹவ் டிடி வீ ஃபைண்ட் அவுட் தொடரின்24 புத்தகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டன.
IIT மெட்ராஸ் அளித்த பொருளாதார உதவியுடன், தெலுங்கு புத்தகங்களின் பிரதிகள் தெலுங்கு மாநிலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான ஊரக பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழ் புத்தகங்கள் மாவட்ட நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு தமிழ்நாட்டில் ஊரக பள்ளிகளின் நடவடிக்கைகளுக்காக ஒர் அரசு சாரா தொண்டு நிறுவனத்தால் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. கார்ப்போரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிடி (CSR) ஃபண்ட்ஸ் ஆதரவுடன் நாங்கள் தற்போது ஹிந்தி பேசும் மாநிலங்களிலும் அடியெடுத்து வைக்க தொடங்கி விட்டோம்.
இந்திய மொழிகள் மகத்தான இலக்கிய பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. ஆனாலும் இவை 21-ம் நூற்றாண்டுக்கு பொருந்தும் நிலை மோசமாகவே இருந்து வருகிறது. ஆகவே இந்திய மொழிகளின் இலக்கியங்கள் போதுமான அளவுக்கு நவீன மயமாக்கப்பட வேண்டும், மற்றும் அறிவாற்றல் அம்சங்களோடு பெருமளவில் அவை விஸ்தீரணம் செய்யப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதுபோன்ற அறிவாற்றல் வள ஆதாரங்களை உருவாக்குவது ஆங்கில அறிவு இல்லாத 90 சதவிகித இந்தியர்களை சுய அதிகாரம் கொண்டவர்களாக்கும்.ஏன், இது இந்திய மறுமலர்ச்சியைக் கூட ஏற்படுத்தக் கூடும்..


No comments:

Powered by Blogger.