Breaking

சில கனவு கண்டால் கிடைக்கும் பலன்கள்..





 பாலை கீழே கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாலை கீழே கொட்டுவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த செயல்களின் மூலம் கிடைக்க வேண்டிய பொருள்வரவு காலதாமதமாகும் என்பதைக் குறிக்கின்றது.

🌟 மேலும் அவர்களின் மூலம் சில மாற்றமான சூழல் உண்டாகலாம். 

2. ஆட்டுக்குட்டியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ஆட்டுக்குட்டியை கனவில் கண்டால் செய்ய நினைத்த காரியங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது. 

3. கால்நடைகளை கிணற்றில் இருந்து வெளியில் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கால்நடைகளை கிணற்றில் இருந்து வெளியில் எடுப்பது போல் கனவு கண்டால் மனதிற்கு மிகவும் நெருங்கிய நபர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். ஆகவே, கவனத்துடன் செயல்படவும்.

🌟 சொத்து சார்ந்த விவகாரங்களில் நிதானமாக முடிவை எடுப்பது நன்மையை தரும். 


4. திருநீற்றை கனவில் கண்டால் என்ன பலன்? 

🌟 திருநீற்றை கனவில் கண்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலரும் என்பதைக் குறிக்கின்றது.

5. தங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தங்கத்தை கனவில் கண்டால் மகிழ்ச்சியான மற்றும் எதிர்பாராத ஆதரவுகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. கண்ணாடி பார்க்கும் போது தலையில் பல்லி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கண்ணாடி பார்க்கும் போது தலையில் பல்லி விழுவது போல் கனவு கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உண்டாகும் என்பதை உணர்த்துகிறது.

7. பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பெண்களை கனவில் கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது. 


8. நாய் கடிக்க வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிக்க வருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

9. நான் கடக ராசி, துலாம் லக்னம். எந்த ராசிக்கல் மோதிரத்தை அணிய வேண்டும்? 

🌟 துலாம் லக்னக்காரர்கள் வைரக்கற்கள் பதித்த மோதிரத்தை அணியலாம்.

🌟 ராசிக்கற்களை அணியும் போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

10. பசு மாட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பசு மாட்டை கனவில் கண்டால் எதிர்காலம் சார்ந்த பணிகளால் சிறப்பான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

No comments:

Powered by Blogger.