Breaking

வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் அறிவோம்..





வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும்
பயன்கள் அறிவோம்..

பொதுவாக வாழையின் ஒவ்வொரு பாகமும் மனித உடலின் ஒவ்வொரு பிரச்சனையை சரிசெய்யும் வகையில் அமைந்திருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

சிறுநீரகத்தில் ஏற்கனவே கற்கள் வந்து பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.

நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும் வாழைத்தண்டு ஜூஸை வெறும் வயிற்றில் காலையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வரலாம். நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்களும் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க உடனடி தீர்வு காணலாம்.
பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல் உடனே குணமாகும்.


நீரிழிவு நோயாளிகள் தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கலாம். விரைவில் சர்கக்ரை நோயிலிருந்தும் விடுபடலாம்.

சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றை போக்கவும் வாழைத்தண்டு உதவுகிறது.

வாழைத்தண்டை நார் நீக்கி சுத்தம் செய்து சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் உப்பு, மிளகு, சீரகம் மற்றும் புளிக்காத தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டினால் வாழைத்தண்டு ஜூஸ் ரெடி.

No comments:

Powered by Blogger.