Breaking

உங்கள் கை ரேகை காட்டும் அற்புதம்.. உங்கள் கைரேகை என்ன சொல்கிறது ஒரு பார்வை..





உங்கள் கை ரேகை காட்டும் அற்புதம்..
உங்கள் கைரேகை என்ன சொல்கிறது ஒரு பார்வை..

ஜாதகம் என்பது ஒரு மனிதனின் பிறந்த நேரம், பிறந்த வருடம், பிறந்த மாதம், பிறந்த தேதி ஆகியவை தெரிந்தால் மட்டுமே கணிக்க முடியும். எண் கணிதம் எனப்படுவதும் ஏறக்குறைய இப்படித்தான். ஆனால், ரேகை மட்டும் இதற்கு விதிவிலக்கு. ரேகையை வைத்து ஒரு மனிதனை பற்றி ஆழமாக கணித்து விடலாம்.
ஒருவரின் ரேகையை வைத்து ஜெனன ஜாதகத்தை அறிய முடிவது போல, ஜெனன ஜாதகத்தை வைத்து ரேகையை அறிய முடியாது. இவ்வளவு சிறப்புகளை கொண்ட கைரேகையை பற்றி தெரிந்து கொள்வோம்.
கைரேகை சாஸ்திரம் அல்லது குறிபார்த்தல் என்பது ஒருவரின் உள்ளங்கையில் இருக்கும் கைரேகையை ஆராய்வதன் மூலமாக ஒருவரின் எதிர்காலத்தையும், குணத்தையும் சொல்லும் கலையாகும்.


இது கைரேகை வாசிப்பு அல்லது குறிசொல்லுதல் என்றும் அழைக்கப்படும்.
இது உலகின் எல்லா பகுதிகளிலும் பல்வேறு கலாச்சார வேறுபாடுகளுடன் காணப்படுகிறது. இவ்வாறு குறிசொல்லும் பழக்கமுடையவர்கள் பொதுவாக கைரேகை ஜோதிடர்கள், கைரேகை படிப்பவர்கள் அல்லது குறிசொல்பவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
கைரேகை கலையை சமஸ்கிருதத்தில் 'ஹஸ்த ரேகா சாஸ்திரம்" எனக் குறிப்பிடுகிறார்கள். ஹஸ்தம் என்றால் கை என்று பொருள். ரேகா என்றால் கோடு என்று பொருள். சாஸ்திரம் என்றால் அறிவியல் என்று பொருள். எனவே 'ஹஸ்த ரேகா சாஸ்திரம்" என்றால் கையிலுள்ள கோடுகளை பற்றிய அறிவியல் எனப் பொருள்படும்.

No comments:

Powered by Blogger.