Breaking

கொரானா – முன்னெச்சரிக்கையாக நாம் செய்ய வேண்டியது..
கொரானா – முன்னெச்சரிக்கை.

1. வீட்டிலிருந்து வெளியேறி வீடு திரும்பும்போது.

அப்போது முதலில் உங்களது காலணியை வெளியிலே கழட்டி வைக்கவும்.

கை கால்களைச் சுத்தம் செய்யும் வரையில் வீட்டில் எந்த ஒரு பொருளையும் தொடாதீர்கள்.

பிறகு வீட்டினுள் கால் எடுத்து வைப்பதற்கு முன்னதாக நீங்கள் அணிந்துள்ள வெளி ஆடைகளை அவிழ்த்து தனியே வைத்துவிடுங்கள். அவற்றை பிறகு துணி சோப்பு கொண்டு துவைத்து உலர்த்த வேண்டும்.

வீட்டிற்கு வெளியில் தண்ணீர் குழாய் இருந்தால் அங்கேயே கை கால் முகம் போன்றவற்றை சோப்பு கொண்டு நன்கு கழுவி சுத்தமான துண்டினால் துடைத்து ஈரத்தைப் போக்கவும்.

வெளியில் இருந்து வாங்கி வந்த காய்கறி போன்ற பொருட்களை பிளீச்சிங் பவுடர் கரைந்த நீரில் அழுத்து எடுத்து பின் நீர் ஊற்றி உதறி எடுத்துச் செல்க.


நீங்கள் அணிந்த மூக்குக் கண்ணாடி, கைபேசி, கார் மற்றும் வாகனங்களின் சாவி இவற்றை ஆல்கஹால் அல்லது சானிடைசர் கொண்டு துடைத்து விடவும். அப்போது அவற்றில் உள்ள நோய் தொற்று நீங்கும். கை பேசி தவிர மற்றவற்றை சோப்புத் தண்ணீர் கொண்டும் கழுவி தொற்று நீக்கலாம்.

நீங்கள் அணிந்திருந்த முகக் கவசம் மற்றும் கையுறைகளை வீட்டிற்கு வெளியிளேயே நின்று அவிழ்த்து நீக்குக. அவற்றை மறுபடியும் பயன்படுத்த கூடாது. உடனே கை கால் முகம் போன்றவற்றை சோப் போட்டு கழுவி சுத்தம் செய்க.

வீட்டிற்கு வெளிப்புறத்தில் இருக்கின்ற உங்களது நாய் பூனை கிளி போன்ற செல்லங்களை தொடாதீர்கள். கை கால்களை மேலே குறிப்பிட்டதைப் போல் சோப்பு நீரினால் கழுவி துடைத்துவிட்ட அவற்றைத் தொடலாம்.

----------

2. நோய் தொற்று எளிதாக ஏற்பட வாய்ப்புள்ளோர் வீட்டில் இருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முன்னேற்பாடு. பொதுவாக அறுபது வயதிற்கு மேற்பட்டோர், சர்க்கரை நோய் உள்ளவர், மற்றும் இதர நோயாளிகள் வீட்டில் இருக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

வயதானவர்க்கும் நோயாளிகளுக்கும் தனியாக குளியல் மற்றும் கழிப்பிட வசதிகளைக் கொள்வது நலம். அவற்றை அடிக்கடி பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீரால் சுத்தம் செய்யவும்.

அவர்கள் பயன்படுத்துகின்ற மின்சாதன ஸ்விச், மேசை நாற்காலி, கதவின் கைப்பிடி போன்றவற்றையும் தரையையும் கிருமி நாசினி கலவையால் அடிக்கடி துடைத்து சுத்தம் செய்க.

நோயுற்றவர்களும் வயோதிகர்களும் தனித்தனி அறைகளில் படுத்து உறங்குமாறு பார்த்துக் கொள்ளவும். படுக்கையும் பாய்விரிப்பும் தனித் தனியாக இருப்பது நல்லது. காற்றோட்டமான அறை நன்று.

ஒரு வேளை ஒரே இடத்தில் படுத்து உறங்க நேரிட்டால் தகுந்த இடைவெளி விட்டு படுக்கை அமையட்டும்.

ஒருவர் பயன்படுத்திய துண்டு உடை முகக் கவசம் சோப் தட்டு ஸ்பூன் டம்ப்ளர் போன்றவற்றை மற்றவர் பயன்படுத்த கூடாது. சூடான உணவை உண்க. நல்ல நீர் அருந்துக.

--------

3. வீட்டை விட்டு வெளியேறும் போது கவனிக்க வேண்டியவை.

முழு கைகளையும் மறைக்கின்ற ஆடையை அணிவது நலம் தரும். கால்களை மறைக்கும் பேண்ட மற்றும் புடவை சுடிதார் போன்றவை நலம் தரும்.

வெளியே செல்லும்போது பெண்கள் தலைமுடியை பின்புறம் தொங்க விடவேண்டாம். தலையில் அள்ளி முடித்துக் கொள்க. மோதிரம், காதணி, வளையல் போன்றவற்றை அணிந்து செல்ல வேண்டாம்.


ஆட்டோ, பஸ், இரயில் போன்ற பொது வாகனங்களில் பயணிக்க வேண்டாம்.

வெளியில் எதையாவது தொட நேரிட்டால் கைவிரல்களை கை குட்டை அல்லது டிஷ்யு தாள் போன்றவற்றினால் மூடி மழைத்து பின் தொடவும். கூடுமானவரையில் அந்தத் துண்டு துணி தாள் போன்றவற்றை வெளியிலேயே விட்டு விடுங்கள்.

தும்மல் இருமல் ஏற்பட்டால் முகத்தை உங்களது உள்ளங்கையினால் மறைக்கக் கூடாது. மாறாக கையை உயர்த்தி மடக்கி முழங்கை முட்டியிடுக்கில் முகம் புதைத்து தும்மலாம்.

வெளியில் எங்கு எதனைத் தொட்டாலும் உடனே சானிடைசர் திரவம் அல்லது சானிடைசர் ஜெல் கொண்டு கையை துடைத்துக் கொள்க. அல்லது குழாய் நீரில் கையினை நன்கு கழுவி சுத்தம் செய்க.

வெளியில் மற்றவரின் உடலை அல்லது கைகளைத் தொடாத இடைவெளியில் பயணிக்கவும்.

கைகளினால் முகத்தை (கண் காது மூக்கு கன்னம்) தொடக் கூடாது.

அழுக்குப் பணத் தாள் காசு போன்றவற்றை வெறும் கைகளினால் கொடுப்பது அல்லது பெறுவது தவிர்க்கவும். முடியாத போது காசினை சானிடைசர் கொண்டு துடைக்கலாம்.

வெளியில் கூடுமானவரையில் முகக் கவசம் அணிந்து செல்க.

--------

No comments:

Powered by Blogger.