Breaking

குழந்தைகளுக்கு எத்தனை வயதுக்குள் பல் தேய்க்க கற்றுக்கொடுக்க வேண்டும்?




குழந்தைகளுக்கு எத்தனை வயதுக்குள் பல் தேய்க்க கற்றுக்கொடுக்க வேண்டும்?

குறைந்தது 2 வயதில் ப்ரஷ் பண்ண குழந்தைகளுக்கு கற்று கொடுத்திருக்க வேண்டும். 3 அல்லது 3 1/2 வயதுக்குள் குழந்தைகளே தனியாக ப்ரஷ் பண்ண ஆரம்பித்திருக்க வேண்டியது அவசியமாகும். பற்களின் ஆரோக்கியம் பற்றிய புரிதலையும் குழந்தைப்பருவத்திலேயே ஏற்படுத்த வேண்டும்.

பல் தேய்க்கும் சரியான முறை எது?

2 அல்லது 3 நிமிடத்துக்கு மேலோ அல்லது குறைவாகவோ பல் துலக்கும் நேரம் இருக்கக் கூடாது. ப்ரஷ்ஷினைத் தேய்க்கும்போது மிகுந்த அழுத்தம் கொடுக்கக் கூடாது. இல்லாவிட்டால் பல்லின் எனாமல் பகுதியில் தேய்மானம் ஏற்படும். நீண்ட நாள் இதேமுறையில் பல் துலக்கினால் எனாமல் கரைந்து பல்லில் பள்ளம் ஏற்படக் கூட வாய்ப்பிருக்கிறது. மனதை எங்கோ அலைபாய வைத்துக் கொண்டு, நீண்ட நேரம் சிலர் பல் தேய்ப்பார்கள். இது தவறு. மேல் பல், கீழ் பல் சேர்த்த மாதிரி கடித்துக்கொண்டு வட்டமாக(Anti clockwise) பல் தேய்க்க வேண்டும். அவ்வாறு செய்வதால் கையின் அழுத்தம்(Arm force) பல்லுக்கு போகாது.

ப்ரஷ் பயன்படுத்துவது அவசியமா?


இன்று நாம் உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் பாக்கெட்டுகளில் பாதுகாக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளாக உள்ளது. எனவே, ப்ரஷ் பயன்படுத்துவதே சரியான வழி. விரலால் பல் துலக்கும்போது பல்லிடுக்கில் இருக்கும் உணவுப்பொருள் அகற்றப்படாது. ப்ரஷ் பயன்படுத்துவதால் பல்லின் இடுக்கில், மூலையில் புதைந்த உணவுப் பொருட்கள்கூட வெளியே வந்துவிடும். இப்படி ப்ரஷ் பயன்படுத்துவதால் ஈறில் சீரான ரத்த ஓட்டமும் நடைபெறும். பல் துலக்கிய பிறகு, கடைசியாக வேண்டுமானால் விரலால் ஒருமுறை தேய்த்துக் கொள்ளலாம். இதுபோல் விரலால் தேய்க்கும்போது கீச், கீச் என்ற ஒலி ஏற்படும்போது பற்கள் சுத்தமானதை உறுதி செய்து கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் சொத்தைப் பல் ஏற்பட்டால், அதனால் பிறக்கும்

குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா?

கர்ப்ப காலத்தில் சொத்தை பல் வருவது மிகவும் குறைவு. அப்படியே வந்தாலும் அது குழந்தையிடம் ஏற்படாது. மரபு வழியாக இதய நோயாளி, சர்க்கரை நோயாளிகளுக்கு இதுபோன்ற சொத்தைப்பல் வர வாய்ப்பிருக்கிறது. சிலர் சூயிங்கம் மெல்கின்றனர்.

இது பற்களின் ஆரோக்கியத்துக்கு பாதகமானதில்லையா?

சூயிங்கம் பயன்பாடு ஆபத்து என்று சொல்ல முடியாது. சொத்தை பல் அதிகம் வராமல் தடுக்க சுகர் ஃப்ரீ சூயிங்கம் பயன்படுத்தலாம் என்றுகூட சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, ஒரு நாளைக்கு 2 சூயிங்கம் வரை பயன்படுத்தலாம். இரண்டுக்கும் மேல் சூயிங்கம் பயன்படுத்துவதுதான் தவறு. அதிகமான சூயிங்கம் மெல்லும்போது மேல் தாடை மற்றும் கீழ் தாடையில் உள்ள எலும்பில் கால்சியம் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. இது பல் ஆடக் கூட காரணமாகும்.

No comments:

Powered by Blogger.