Breaking

இடுப்பு, முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி... இனி கவலை வேண்டாம்...!! இடுப்பு, முதுகுவலி ஏற்பட காரணங்கள்...!!





இடுப்பு, முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி...
இனி கவலை வேண்டாம்...!!

இடுப்பு, முதுகுவலி ஏற்பட காரணங்கள்...!!

வேலைக்கு செல்லும் பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் என அனைவரும் அதிகம் அவதிப்படும் விஷயங்களில் முக்கியமான ஒன்றுதான் முதுகுவலி... 

முதுகுவலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது.

முதுகுத்தண்டு என்பது நரம்புகள், மூட்டுகள், தசைகள், தசைநாண்கள் மற்றும் தசைநார்களுள்ள சிக்கலான ஒன்றோடொன்று இணையும் ஒரு பிணையமாகும். 

இவையனைத்தும் வலியை உண்டாக்க கூடியவையாகும். முதுகுத்தண்டில் தோன்றி கால்களுக்கும், கரங்களுக்கும் செல்லும் பெரிய நரம்புகள் வலியை மற்ற உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லக்கூடும்.

முதுகுவலியின் முதல் அறிகுறிக்கு அதிக பரிசோதனை தேவைப்படாது. ஆறு மாதங்களுக்கு வலி தொடர்ந்தாலோ, கால் தசைகள் வலுவிழந்தாலோ, சிறுநீர், மலம் வெளியேறுவதில் கட்டுப்பாடு குறைந்தாலோ, சிறுநீருடன் ரத்தம் சேர்ந்து வெளியேறினாலோ, தலைவலியுடன் வாந்தி வந்தாலோ அவசியம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.


அதிக உடல் எடை இருந்தாலும் முதுகுவலி ஏற்படும். உடல் எடையை குறைத்தால் கூட இடுப்புவலி, முதுகுவலியில் இருந்து விடுதலை பெறலாம். 

இடுப்புவலி, முதுகுவலி அதிகமாக இருந்தால் அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும்.

முதுகுவலி இருப்பவர்கள், அதுவும் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்காருவதை தவிர்க்கவும். ஒரு நாளைக்கு இருமுறை ஹாட் வாட்ட‌ர் பேக் ஒத்த‌ட‌ம் கொடுத்தால் 50 சதவிகிதம் வ‌லி ...!

எந்த ஒரு பொருளையும் கீழே சட்டென்று குனிந்து எடுக்கக்கூடாது. குழந்தைகளை குளிக்க வைக்கும்போது ஒரு சிறிய நாற்காலி போட்டு உட்கார்ந்து குளிக்க வைக்கலாம்.

துணிகளையும் அதிக நேரம் குனிந்து துவைக்கக்கூடாது. இதனால் இடுப்புவலி அதிகமாக வாய்ப்புள்ளது. 


*என்ன சாப்பிடலாம்?*

இடுப்பு பலம் பெற முட்டை, வாழைப்பழம், சிக்கன் மற்றும் மட்டன் எலும்பு சூப், உளுந்தங்கஞ்சி, உளுந்து சுண்டல், வெந்தய கஞ்சி போன்றவை சாப்பிடலாம். 

அதிக இடுப்புவலி உள்ளவர்கள், இரண்டு முட்டையை அவித்து மிளகு, உப்பு தூவி சாப்பிடுவது மேலும் பலனை தரும்.

குழந்தை பேற்றின்போது இடுப்பு எலும்புகள் விலகிக் கொடுத்து பின்னர் எலும்புகள் பழைய நிலைமைக்கு வரும். அந்த சமயத்திலும் எலும்புகளுக்கு வலிமை சேர்க்க உளுந்து சார்ந்த உணவுகள் அவசியம். 

35 வயதிற்கு மேல் எலும்பு தேய்மானம் துவங்கும். அப்போது கால்சியம் மற்றும் புரதச்சத்துள்ள உணவுகள் மூலமாக எலும்புக்கு வலு சேர்க்கலாம். நாற்பது வயதிற்கு மேல் உணவில் கேழ்வரகு, பாசிப்பருப்பு, வெந்தயக்கீரை, சோயாபீன்ஸ் ஆகியவை கட்டாயம் சேர்க்க வேண்டும்.

🧡💛🧡💛🧡💛🧡💛🧡💛🧡💛

No comments:

Powered by Blogger.