Breaking

பல் வலி பிரச்சனை.. சரியான பிரஷ்சினைத் தேர்ந்தெடுப்பது எப்படி ?




பல் வலி பிரச்சனை..
சரியான பிரஷ்சினைத் தேர்ந்தெடுப்பது எப்படி ?

பிரஷ்சினை பிராண்ட் பார்த்து மட்டுமே வாங்கக் கூடாது. டூத் பிரஷ் அட்டையின் மேல் Soft, Hard, Medium, Extra soft, Extra hard என பிரஷ்கள் 5 வகையாக அச்சிடப்பட்டிருக்கும். பற்களில் எந்த பாதிப்பும் இல்லாதவர்கள் Soft brush பயன்படுத்தலாம். வெற்றிலை பாக்கு, புகை பிடிப்பவர்கள், சொத்தை பல், பல் கூச்சம் போன்ற பிரச்னை உள்ளவர்கள் Extra soft brush பயன்படுத்தலாம். Extra soft brush மிகவும் வளைந்து கொடுப்பதால் முதியவர்களுக்கு மிகவும் நல்லது என்று சொல்லலாம்.


சொத்தை பல் வந்தால் உடலின் வேறு பாகங்களும் பாதிக்கப்படுமா?

பல்லுக்கும் இதயத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே, இதய நோயாளிகளாக இருந்தால் சொத்தை பல்லில் உள்ள பாக்டீரியா இதயத்தை பாதிக்கும் வாய்ப்பு உண்டு. அதேபோல் ஈறினைச் சுற்றியுள்ள சதையில் வீக்கம், புண் இருந்தால் சர்க்கரை நோய் பாதிப்பாகக் கூட இருக்கலாம். இதற்கு Underline infection என்பார்கள். எனவே, பல் சொத்தை என்பதை சாதாரண பிரச்னையாக மட்டுமே எல்லா நேரங்களிலும் புரிந்துகொள்ளக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெறுவது சிறந்ததாகும்.

No comments:

Powered by Blogger.