Breaking

ஜலதோஷத்தை சீக்கிரமாக போக்கும் சுக்கு மிளகு குழம்பு செய்வது எப்படி?




ஜலதோஷத்தை சீக்கிரமாக போக்கும் சுக்கு மிளகு குழம்பு செய்வது எப்படி? 
....................................................................................

தேவையான பொருட்கள் 2 டீஸ்பூன் தனியா 1/2 டீஸ்பூன் மிளகு 1/2 டீஸ்பூன் சீரகம் 2 காய்ந்த மிளகாய் 3 சிறிய துண்டு சுக்கு 1 எலுமிச்சை அளவு புளி 5 டீஸ்பூன் நல்லெண்ணெய் 3/4 டீஸ்பூன் உப்பு 6 சின்ன வெங்காயம் 8 பூண்டு பற்கள் 1/2 டீஸ்பூன் கடுகு 1/4 டீஸ்பூன் வெந்தயம் தனியா, மிளகு, சீரகம், சுக்கு, காய்ந்த மிளகாயை 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக வறுக்கவும். வறுத்த பொருட்களை ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். 

புளியை உப்பு சேர்த்து ஊற வைத்து கரைத்து வைக்கவும். அரைத்து வைத்துள்ள மசாலாவை புளி கரைசலில் கரைத்துக் கொள்ளவும். வாணலியை சுடாக்கி எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் தாளிக்கவும். அவை பொரிந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வறுபட்டதும் தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும். சுக்கு கரைசல் கலந்த புளி தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். குழம்பு நன்றாக சுண்டியதும் அடுப்பை அணைத்து விடவும். இதில் சுக்கு, மிளகு இரண்டும் கலந்து இருப்பதால் மழை கால ஜலதோஷத்திற்கு நிவாரணம் தரும் சிறந்த குழம்பாகும்.

No comments:

Powered by Blogger.