Breaking

சொத்தை பல் என்பது என்ன? சொத்தை பற்களுக்கான அறிகுறிகள் என்ன?





சொத்தை பல் என்பது என்ன?!

நாம் உட்கொள்ளும் உணவானது பல்லின் நடுவில் டெண்டின் பகுதியில் சிக்கிக் கொண்டு, பல நாட்களாக கவனிக்காமல் இருந்தால் பாக்டீரியாக்கள் உருவாகிறது.இதையே பல் சொத்தை என்கிறோம்.

சொத்தைப்பல் வந்தால் வலி ஏற்படுவது எதனால்?

பல் என்பது Enamel, Dentin, Pulp என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றில் பல்லின் நடுப்பகுதிக்கு பெயர்தான் Dentin. பல்லை ஒட்டி உள்ள எனாமல் பகுதியை பாக்டீரியா துளைக்கும்போது, பல்லுக்கு வலி தெரியாது. அதுவே டெண்டின் உள்ள பகுதியை துளைக்கும்போது வலி தெரியும்.


சொத்தை பற்களுக்கான அறிகுறிகள் என்ன?

பல்லில் உணவுத்துகள் மாட்டிக் கொள்வது அல்லது பல்கூச்சம் ஏற்படுவது இதன் முதல் அறிகுறி. இரண்டாவது அறிகுறி துர்நாற்றம் வீசுவது. பல்லில் உணவுத்துகள் மாட்டும்போதே பல் மருத்துவரை சந்தித்து பரிசோதிக்க வேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவரை அணுகி பல் பரிசோதனை செய்வதால் சொத்தை பல்லுக்கான அறிகுறிகளை கண்டுபிடித்து ஆரம்ப நிலையிலேயே சரிசெய்துவிடலாம். இதற்கு Preventive treatment என்று பெயர்.

No comments:

Powered by Blogger.