Breaking

குளிர்சாதனப்பெட்டியில் உள்ள நீரை எப்போதாவது அருந்தினால் சரி. ஆனால் தொடர்ந்து அருந்துவது உடல் நலத்தை பாதிக்கும்.




குளிர்சாதனப்பெட்டியில் உள்ள நீரை எப்போதாவது  அருந்தினால் சரி. ஆனால் தொடர்ந்து அருந்துவது உடல் நலத்தை பாதிக்கும். 

குளிர்ந்த நீரை பருகுவதால் விளையும் தீமைகள்:

சாப்பிட்டவுடன் ஐஸ் தண்ணீரை குடித்தால், உணவு செரிமானம் ஆவதில் கடும் பிரச்சனைகள் ஏற்படும். மேலும் உணவிலுள்ள சத்துக்களையும் உங்களால் பெற முடியாது.

நம்முடைய உடலின் வெப்ப நிலையை விட குறைவான வெப்ப நிலை கொண்ட பொருளை அருந்தும் போது, உடலின் வெப்ப நிலையை சீராக்க உடல் அதிக ஆற்றலை எடுத்துக் கொள்ளும். இதனால் உடலுக்கு செல்ல வேண்டிய ஊட்டச்சத்து , ஆற்றலாக மாறி வீணாகிவிடும்.

தொடர்ந்து குளிர்ந்த நீரை மட்டுமே அருந்தி வருபவர்களுக்கு ,சுவாசப்பாதையில் உள்ள சதைப்பகுதி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குளிர்ந்த நீரை அடிக்கடி குடிப்பதால், பற்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குளிர்ந்த நீரை அருந்தும் போது பற்களில் கூச்சம், வலி ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

குளிர்ந்த நீரை பயன்படுத்துவதானால் மண்பானையை பயன்படுத்துங்கள். அது குளிர்சாதனப் பெட்டியைவிட சிறந்ததே.

No comments:

Powered by Blogger.