Breaking

பத்தாம் வகுப்பில் மதிப்பெண் கணக்கிடும் முறை !! உங்க மார்க் எவ்வளவு தெரியுமா ?






பத்தாம் வகுப்பில் மதிப்பெண் கணக்கிடும் முறை !! உங்க மார்க் எவ்வளவு தெரியுமா ?

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆகிய பொதுத்தேர்வுகள் வரும் 15-ம் தேதி முதல் தொடங்க இருந்தது. இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வரும் தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ஹால் டிக்கெட்டுக்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்து வந்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக கட்சிகள் , தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் , ஜுலை மாதம் 2-வது வாரத்திற்கு தேர்வை ஒத்தி வைக்கலாமா..? என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.



இதையடுத்து , பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், இன்று நண்பகல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் கூறியதாவது ; தமிழகத்தில் வரும் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மேலும், மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதம் கணக்கிடப்படும்.

அதேபோல, வருகை மதிப்பெண் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்கள் கணக்கிடப்படும். 11ம் வகுப்புக்கு விடுபட்ட தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 12ம் வகுப்பை பொறுத்தவரையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். நேற்று , தெலுங்கானா மாநிலத்தில் , அம்மாநில முதலமைச்சரும் 10 ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.