சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி..
சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி..
தேவையான பொருட்கள் :
பச்சரிசி : 250 கிராம்
நெய் அல்லது டால்டா : 1 டீஸ்பூன்
தண்ணீர் : 600 மி.லி
கருவேப்பிலை : சிறிதளவு
வறுத்த பாசிப்பருப்பு : 50 கிராம்
மிளகு , சீரகம் : 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு : சிறிதளவு
உப்பு : சிறிதளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 600 மி.லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து பச்சரிசியையும் , பாசிப்பருப்பையும் களைந்து போட்டு உப்பு போட்டு குழைய வேக வைத்து இறக்கவும். மற்றொரு சட்டியில் நெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு , சீரகம் , முந்திரிப் பருப்பு , கருவேப்பிலை போட்டு சிவக்க வறுத்த உடன் சாதத்துடன் கலந்து கிளறி விட்டு இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.சுவையான வெண் பொங்கல் தயார் .
No comments: