Breaking

தமிழகத்திற்கு மழை வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை..





தமிழகத்திற்கு மழை வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை..

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மணிக்கு 45 இல் இருந்து 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் 2 நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Powered by Blogger.