Breaking

கேழ்வரகு உளுந்து முருங்கை கீரை தோசை..





கேழ்வரகு உளுந்து முருங்கை கீரை தோசை..

தேவையான பொருட்கள் 

 கேழ்வரகு மாவு - 1 கப் உளுந்தம் பருப்பு - கால் கப் முருங்கை கீரை - 1 கைப்பிடி வெங்காயம் - 2 ப.மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - தேவையான அளவு 

🔘செய்முறை ;* 

முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்._ _🧇வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்._ _🧇உளுந்தம் பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு ஊறியதும் எடுத்து களைந்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்._ 

உளுந்து நன்றாக நைசாக அரைந்ததும் அதில் கேழ்வரகு மாவை சேர்த்து உப்பு போட்டு நன்றாக கலக்கவும்._ 



பின் அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்._ 

பின்னர் அத்துடன் முருங்கை கீரை சேர்த்து நன்கு கலந்து மாவை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்._ 

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் தடவி மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் சிவந்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்._ _

சத்தான சுவையான கேழ்வரகு உளுந்து முருங்கை கீரை தோசை ரெடி..._✍️🌹 


No comments:

Powered by Blogger.