Breaking

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு






*🛑💢தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு
   


 *🛑கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.*


சென்னை:

*🛑தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 232-ஆக அதிகரித்துள்ளது.*


*🛑இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை தமிழக அரசு தெரிவித்துள்ளது.*

*லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணமாக வசூலிக்கலாம்.*

*🛑தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம். மேலும் நிர்ணயிக்கப்பட்டது அதிகபட்ச கட்டணம் என்பதால் நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.*

No comments:

Powered by Blogger.