Breaking

சர்வதேச இணைய வழி கருத்துரையாடல் போட்டியில் அரசுப் பள்ளி ஆசிரியர் வெற்றி!!






சர்வதேச இணைய வழி கருத்துரையாடல் போட்டியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வெற்றி!!


மைக்ரோசாப்ட் கல்விக் குழுமத்தின் ஓர் அங்கமாக விளங்கி வரும் (Kahoot )
"ககூட்" மதிப்பீட்டு மென்பொருள் நிறுவனம் கடந்த 17.06.2020 அன்று "Kahoot Edu Summit" என்ற இணைய வழி கருத்துரையாடல் நிகழ்வினை சர்வதேச அளவில் நடத்தியது. 
இந் நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். Kahoot குழுமத்தின் நிறுவன ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக உள்ள இஸபெல்லா அவர்கள் தலைமையில் ஒரு கருத்துரையாடல் நடைபெற்றது. வகுப்பறை குழுச் செயல்பாடுகளில் மாணவர்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மறு வரையறை செய்தல் என்னும் தலைப்பில் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்ட திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் வட்டாரம் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் திரு.சரவணன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். பல்வேறு பரிசுகள் அடங்கிய Swag Bag என்ற பரிசுத் தொகுப்பினை அறிவித்து பாராட்டியுள்ளது.


இவர் ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய "வேக்லட் கம்யூனிட்டி வீக்" என்கின்ற சர்வதேச அளவிலான போட்டியில் உலக அளவில் முதல் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் S. மனோகர், கரூர் மாவட்டம்
தாந்தோணி ஒன்றியம், வெள்ளியணை அரசு பள்ளி ஆசிரியர் அவர்களும் வெற்றிவாகை சூடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்..

No comments:

Powered by Blogger.