Breaking

சத்துணவு உணவூட்டுத்தொகையை அந்தந்த மாணவரின் வங்கிக்கணக்குகளில் செலுத்த தமிழக அரசு முடிவு: பெற்றோர்கள் வரவேற்பு_*




*_NEWS UPDATES_*🇮🇳📡  
🔷🔸 *_

சத்துணவு உணவூட்டுத்தொகையை அந்தந்த மாணவரின் வங்கிக்கணக்குகளில் செலுத்த தமிழக அரசு முடிவு: பெற்றோர்கள் வரவேற்பு_*

*_தமிழகம் முழுவதும் சத்துணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு, பள்ளி செயல்படாத நாள்களுக்குரிய சத்துணவுக்குரிய தொகையை மாணவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இத்திட்டம் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது_*

_தமிழகம் முழுவதும் அரசு,அரசு நிதியுதவிபெறும் துவக்க, நடுநிலை,உயர்நிலை,மேனிலைப்பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவ,மாணவியர்களுக்கு தற்போது பள்ளிகள் செயல்படாததால்,அத்தகைய நாள்களுக்குரிய உணவூட்டத் தொகையை மாணவ,மாணவியர்களின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது_

*_தமிழகம் முழுவதும் அனைத்து வகை அரசுப்பள்ளிகளிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்தணவுத் திட்டத்தின் கீழ், மாணவ, மாணவிகளுக்கு மதிய சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக, தமிழக அரசானது, தேவையான எரிவாயு, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப்பொருட்கள், காய்கறிகள் ஒவ்வொரு மாணவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நிர்ணயம் செய்து தினமும் வழங்கிவருகிறது. அந்த பொருட்கள் மூலம் சத்துணவு அமைப்பாளர்கள் மேற்பார்வையில், சமையலர்கள் உணவினை தயார்செய்து வழங்கி வருகின்றனர்_*


_கரோனா நோய்த்தொற்றால், முன்னெச்சரிக்கைக் கருதி, அனைத்து பள்ளிகளுக்கு மார்ச் 16 -ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இன்று ஜூன் 27 -ஆம் தேதி சனிக்கிழமையுடன் 104 நாள்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்குரிய சத்துணவும் வழங்கப்படாத சூழல் ஏற்பட்டுவிட்டது_

*_இந்நிலையில், கரோனா தொற்றுகாரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நாள்களுக்கு மாணவ,மாணவிகளுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி உலர் உணவுப்பொருள்களாகவோ, உணவூட்டத்தொகையாகவோ வழங்க ,  தமிழ்நாடு சமூகநலத்துறையின் ஆணையர்(ந.க.எண்-10884-சஉதி-நாள்-ஜூன் 10 -ஆம் தேதி, உத்தரவிட்டு, அதன் உத்தரவு நகல் வாட்ஸ்அப் மூலம் ஜூன் 22 -ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்,அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,கல்வி மாவட்ட அலுவலர்கள்,வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களது நேரடி வங்கிக்கணக்கு எண்கள், வங்கிகளின் ஐஎப்சிகோடு, எம்ஐசிஆர் கோடு, வங்கியின் பெயர், கிளை பெயர் என்று அனைத்து விவரங்களும் பள்ளித்தலைமையாசிரியர்கள் உடனடியாக அனுப்பவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது._*


_இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், தமிழக அரசின் இத்திட்டம் வரவேற்கக்கூடிய ஒன்று என்றனர்._

*_அதன் தொடர்ச்சியாக அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் பள்ளிகளுக்கும், மாணவ,மாணவியர்களின் வீடுகளுக்கும் நேரடியாக்சென்றும், மாணவ, மாணவியர்களது வங்கிக்கணக்குகளை திரட்டி,தொகுத்து மின்னஞ்சல் மூலம் அந்தந்த வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்._*

_தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப்பள்ளிகளின் மாணவ,மாணவியர்களின் வங்கிக்கணக்குகள் இன்னும் ஒரு சில நாள்களில் தலைமையாசிரியர்கள் மூலம், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் சென்னை சமூக நலத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பிவிடும் கடைசிக்கட்டத்தில் உள்ளது. அதன் பின்னர், ஒருசில வாரங்களுக்குள், தமிழக அரசின் உணவூட்டத்தொகையானது அந்தந்த மாணவரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெறும் என்று தெரிகிறது_

No comments:

Powered by Blogger.