Breaking

ஆறு கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்! மத்திய அரசுக்கு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பரிந்துரை!





ஆறு கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்! மத்திய அரசுக்கு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பரிந்துரை!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காலவரையின்றி மூடப்பட்டுள்ள பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தக் கூட்டங்களில் முடிவில் பள்ளிகளை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் நடத்த தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட உடன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தற்காலிக அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

அதன் படி ஆறு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் . முதல் கட்டமாக 11, 12ஆம் வகுப்புகளுக்கு திறக்கப்பட வேண்டும்.

அதன் பிறகு ஒரு வாரம் கழித்து இரண்டாம் கட்டமாக 9, 10ம் வகுப்புகளுக்கு திறக்கப்படும். மீண்டும் இரண்டு வாரம் கழித்து மூன்றாம் கட்டமாக 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மூன்று வாரம் கழித்து 3 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்டு 1 மாத இடைவெளிக்கு பிறகு 1மற்றும் 2ம் வகுப்புகளுக்கும், 5 வாரங்கள் முடிவடைந்த நிலையில் மழலையர் வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

பள்ளிகளில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் வகுப்பறைகள் அமைந்திருக்க வேண்டும். பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையில் வகுப்பறையில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்த பிறகே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

No comments:

Powered by Blogger.