Breaking

மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நீலோபர் BUMS., LLB., திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திருமிகு ம.ப.சிவன் அருள் IAS ஆகியோர் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தினவிழா





மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நீலோபர் BUMS., LLB., திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திருமிகு ம.ப.சிவன் அருள் IAS ஆகியோர் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தினவிழா இனிதே கொண்டாடப்பட்டது.*_



*திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தமிழக ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள அண்ணாநகர் பகுதியில்  கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில்.. மேற்படி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த திரு.கௌரிசங்கர் திரு.சிவராஜ் திரு.லட்சுமணன் மற்றும் உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் திரு.A.அருண்குமார் ஆகியோர் அப்பகுதியிலுள்ள மாணவச் செல்வங்களை ஒன்றிணைத்து 1 லட்சம் விதை பந்துகளை தயாரித்து வைத்திருந்தனர்.*


*இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் BUMS., LLB, மாவட்ட ஆட்சியர் M.P.சிவனருள் IAS அவர்கள் முன்னிலையில் வனப்பகுதிகளில் விதைப் பந்துகளை விதைத்தனர் மற்றும் மரக்கன்றுகளை நட்டு... விதைப்பந்துகள் தயாரித்த மாணவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.*


*இந்நிகழ்வில் வாணியம்பாடி கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி சுப்ரமணியன்., திருப்பத்தூர் மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் சோழராஜன்., வாணியம்பாடி  வட்டாட்சியர் திரு.சிவப்பிரகாசம்., வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன்., ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.பசுபதி MBBS.,   வாணியம்பாடி மண்டல துணை வட்டாட்சியர் திரு.கௌரிசங்கர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள்,  சமூக ஆர்வலர்  K.அரிகிருஷ்ணன்,  திரு.ஆறுமுகம் மு.ஊராட்சி மன்ற தலைவர் தும்பேரி, திரு.சௌந்தர், வேர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பத்திரிகை துறை நண்பர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்..*

No comments:

Powered by Blogger.