Breaking

EPF கணக்கு இருக்கா? உங்களுக்கு ரூ.6 லட்சம் வரை லைஃப் கவரேஜ் இருக்கு





EPF கணக்கு இருக்கா? உங்களுக்கு ரூ.6 லட்சம் வரை லைஃப் கவரேஜ் இருக்கு

ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.6 லட்சம் வரை ஆயுள் பாதுகாப்பு அளிக்கும் திட்டம் உள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆம். ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு லைஃப் கவரேஜ் எனப்படும் இந்த ஆயுள் பாதுகாப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

EPF கணக்கு வைத்திருப்போருக்கு EDLI 1976 விதிகளின் கீழ் இந்த இலவச ஆயுள் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

PF அல்லது EPF கணக்கு திறக்கப்படும்போதே ஒவ்வொரு சந்தாதாரரும் மேற்கண்ட விதிகளின் கீழ் இலவசமாகக் காப்பீடு செய்யப்படுகின்றனர்.


மாத அடிப்படை சம்பளத்தின் 20 மடங்கு அல்லது ரூ.6 லட்சம் வரை, இவற்றில் குறைந்தபட்சம் எதுவோ அதற்கு சந்தாதாரர்கள் தகுதி பெறுவர்.நீண்டகால நோய், தற்செயல் மரணம் அல்லது சாதாரண மரணம் நேரிடும் பட்சத்தில் இத்தொகையை அவர்களோ அவர்களுடைய காப்பாளரோ இந்தக் காப்பீடைக் கோர முடியும்.

மருத்துவக் காப்பீடு இல்லாத EPF கணக்கு வைத்திருப்போருக்கு மட்டுமே இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, பொதுவாக முதலாளிகளால் குழு மருத்துவக் காப்பீடு வழங்கப்படாத தொழில்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

மேலும், இந்த லைஃப் கவரேஜில் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் பெறும் வகையில் மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மத்திய அரசு இது தொடர்பாக எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை.

No comments:

Powered by Blogger.