Sanitizer குறித்த நாம் தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு....
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் , அறிவியல் மக்களுக்கே என்ற முழக்கத்தோடு செயலாற்றி வருகிறது.* கொரானா நோய் தொற்று யிலுருந்து நம்மை பாதுகாக்க sanitizer பயன்படுத்தி வருகிறோம்.
Sanitizer குறித்த நாம் தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு....
*கேள்வி 1*
*Sanitizer ( கிருமிநாசினி) என்றால் என்ன ?*
*பதில்*
Sanitizer ( கிருமிநாசினி ) என்பது...
கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளைக் கொல்லும் திரவமாகும்.
நம் தோலின் மேற்பரப்பு மற்றும் பொருட்களின் மேல் உள்ள நுண்கிருமிகளை இது அழிக்கிறது.
*கேள்வி 2*
*Sanitizer இருக்கும் ரசாயனம் எவை ?*
*எப்படி தயாரிக்ப்படுகிறது ?*
*பதில்*
Sanitizer எனும் கிருமிநாசினி ... பல வேதிப்பொருட்களின் கலவை ஆகும். இதில், எத்தில் ஆல்கஹால், ஹைட்ரஜன் பெராக்ஸைடு, கிளிசரால் போன்ற வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றோடு தண்ணீர் சேர்த்து இக் கிருமிநாசினி தயாரிக்கப்படுகிறது.
*கேள்வி 3*
*குழந்தைகள் sanitizer பயன்படுத்தலாமா ?*
*பதில்*
குழந்தைகள் கைகழுவ sanitizer பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுகிறோம்.
குழந்தைகளுக்கு சோப்பு மூலம் கை கழுவ பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஏனெனில்...
Sanitizerஐக் குழந்தைகள் பயன்படுத்தினால்,
அவர்களின் மென்மையான தோலை.. கிருமிநாசினி பாதிக்கக்கூடும். மேலும், அவர்கள் தம் கைவிரல்களை வாயில் வைக்கவும் வாய்ப்பு உள்ளது.
தேவை ஏற்பட்டால்.... பெற்றோர்களின் மேற்பார்வையில், குழந்தைகள் sanitizer உபயோகப்படுத்துவது நல்லது.
*கேள்வி 4*
*Sanitizer வாங்குபோது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது ?*
*பதில்*
பொதுவாக, எல்லா கிருமிநாசினிகளும் ஒரே அளவிலான ஆல்கஹாலைக் கொண்டிருப்பதில்லை.
அவை, கெட்டியான ஜெல்லாகவோ அல்லது திரவமாக இருப்பதால், அவற்றைப் பயன்படுத்தும்போது, அதிகப்படியான தோலின் பரப்பின் மீது வினைபுரிய வாய்ப்புள்ளது.
எனவே, இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ள ... ஆல்கஹால் அளவைக் கொண்ட கிருமிநாசினிகளை மட்டுமே வாங்கி ...
தேவையான அளவில் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
*கேள்வி 5*
*CDC -center for disease control என்ன கூறுகிறது?*
*பதில்*
கிருமிநாசினியை... பொதுவாக, துப்புரவு மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தலாம். ஆனால், உணவுப் பொருட்களைக் கையாளும் பணியாளர்கள் சானிடைசர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமென அமெரிக்க நோய்த் தடுப்பு மையமானது... பரிந்துரைக்கிறது.
*கேள்வி 6*
*Sanitizer பயன்படுத்தும் போது பாதுகாப்பு அம்சங்கள் எவை ?*
*பதில்*
ஆல்கஹால் கொண்ட சானிடைசர்களை சமையலறை, வாகனங்களின் டிக்கி ( பின்னறை ) அல்லது வெப்பமான இடங்களில் ... கட்டாயம் பயன்படுத்தக் கூடாது.
அதில் உள்ள ஆல்கஹால் எளிதில் தீப்பற்றும் அபாயம் உள்ளது.
எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் ஆல்கஹால் சானிடைசர்களைப் பயன்படுத்தவேண்டும்.
*கேள்வி 7*
*சானிடைசரோ அல்லது சோப்போ இல்லாவிட்டால் எவ்வாறு கைகளைக் கழுவுவது?*
*பதில்*
அவை இல்லையென்று கவலைவேண்டாம்.
வேப்பஞ்சாறு கலந்த நீரிலோ... அல்லது... எலுமிச்சைச் சாறு கலந்த நீரிலோ... 30 விநாடிகளுக்கு, கைகளை நன்கு தேய்த்துக் கழுவினாலே... போதுமானது.
நன்றி.
*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*
No comments: