வானில் அதிசயம்.. சந்திர கிரகணம்.. ஸ்ட்ராபெரி மூன் எக்லிப்ஸ் (Strawberry Moon Eclipse) யாரெல்லாம் பார்க்கலாம்..
வானில் அதிசயம்..
சந்திர கிரகணம்.. ஸ்ட்ராபெரி மூன் எக்லிப்ஸ் (Strawberry Moon Eclipse) யாரெல்லாம் பார்க்கலாம்..
இந்த ஆண்டு சந்திர கிரகணம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இரவு 11:15 மணிக்கு தொடங்கி ஜூன் 6ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 2:34 மணி வரை சந்திர கிரகணம் நீடிக்கிறது. இது இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் ஆகும்.
இந்த சந்திர கிரகணம் ஸ்ட்ராபெரி மூன் எக்லிப்ஸ் (Strawberry Moon Eclipse) என்று அழைக்கப்படுகிறது.
காரணம் :
வெள்ளிக்கிழமை முழு நிலவு நாளில் வானத்தில் ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் நிகழப்போகிறது. ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் ஸ்ட்ராபெரி அறுவடைக்காலமாகும். அதனால்தான் இந்த மாதத்தில் நிகழப்போகும் பெனும்ப்ரல் சந்திர கிரகணத்தை ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என பெயர் வைத்துள்ளனர்.
மொத்தத்தில் மூன்று விதமான சந்திர கிரகணங்கள் உள்ளன. லூனார் எக்லிப்ஸ், பார்ஷியல் லூனார் எக்லிப்ஸ் மற்றும் பெனும்ப்ரல் லூனார் எக்லிப்ஸ். தற்போது நிகழ இருப்பது பெனும்ப்ரல் லூனார் எக்லிப்ஸ் ஆகும்.
பெனும்ப்ரல் லூனார் எக்லிப்ஸில் நிலவானது பூமியின் நிழலின் வெளிபுறத்தில் சென்று குறைந்த வெளிச்சத்துடன் காட்சி அளிப்பது.
பூமியின் வெளிப்புற நிழலானது மிகவும் மங்கி இருப்பதால் பெரும்பாலான மக்களால் எதையும் பார்க்க இயலாது.
சந்திர கிரகணம் :
வானவியலின் அடிப்படையில் தான் ஜோதிடம் அமைந்திருக்கிறது என்றாலும் கிரகணம் பற்றிய கருத்தில் வானவியலும், ஜோதிடமும் சிறிது மாறுபட்டு நிற்கிறது.
வானவியலில், சூரியன் அல்லது சந்திரனின் மீது ஏற்படும் நிழலை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது.
சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும்போது சந்திர கிரகணமும், சூரியன் மறைக்கப்படும்போது சூரிய கிரகணமும் நிகழ்கிறது.
சந்திர கிரகணம் என்பது சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.
எங்கெங்கு தெரியும்... யாரால் பார்க்க முடியும்...?
இந்தியாவில் சந்திர கிரகணம் தெரியாது.
ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸானது நிகழும்போது சந்திரனின் 57 சதவிகிதம் பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்பட்டிருக்கும். இந்த கிரகணம் மொத்தமாக மூன்று மணி நேரமும் பதினெட்டு நிமிடங்கள் வரை நீடிக்கப் போகிறது.
இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற பெரும்பாலான பகுதிகளில் தெரியும். மேலும், தெற்கு கிழக்கு தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகா ஆகிய பெரும்பாலான பகுதிகளில் தென்படும் என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது என்பதால் இந்தியாவில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே கூறலாம்.
No comments: