Breaking

இன்றைய ராசி பலன்கள் பற்றி அறிந்து கொள்வோம்.. 03-07-2020,





இன்றைய ராசி பலன்கள் பற்றி அறிந்து கொள்வோம்..

03-07-2020, ஆனி 19, வெள்ளிக்கிழமை

இராகு காலம் - பகல் 10.30-12.00

எம கண்டம்- மதியம் 03.00-04.30

குளிகன் காலை 07.30 -09.00.


மேஷம்

மற்றவர்களிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலையை உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்தவரை மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனக் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். செய்யும் செயல்களில் கவனமாக இருப்பது நல்லது.

ரிஷபம்

எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.கடன் பிரச்சனைகள் நீங்கும். உற்றார் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். தொழில் தொடர்பாக அனைத்து விஷயங்களும் வெற்றியை கொடுக்கும்.

மிதுனம்

உங்களுக்கு எதிர்பாராத தனவரவு உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தூர பயணங்கள் செல்லும் வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து கடனுதவிகள் கிடைக்கும். புதிய நபரின் அறிமுகம் உண்டாகும்.

கடகம்

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல்நிலையில் சோர்வும், மந்த நிலையும் ஏற்படலாம். புதிதாக எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.


சிம்மம்

பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று சுறுசுறுப்பின்மை, சோம்பல் உண்டாகலாம். உணவு விஷயத்தில் கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் ஒரு சில மாறுதல்களை செய்வதால் லாபங்களை ஈட்டமுடியும்.

கன்னி

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டு. வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் நற்பலன் உண்டாகும்.

துலாம்

பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். சிக்கனமாக செயல்படுவதால் பண பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிர்பாராத சிக்கல்கள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வீட்டில் பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். ஆன்மீக காரியங்களில் செயல்படும் ஈடுபாடு அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.


தனுசு

குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் காணப்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை கொடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஒரு சில உபாதைகள் வந்து நீங்கும்.

மகரம்

சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். கடினமான காரியங்களை எளிதில் செய்து முடிக்கும் துணிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

கும்பம்

உடன்பிறந்தவர்கள் வழியாகச் உதவிகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அனுகூலம் உண்டு. நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் திறமைகளால் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

மீனம்

குடும்பத்தில் பொருளாதாரம் தொடர்பாக நெருக்கடிகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகலாம். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அனுகூலம் உண்டு. உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

No comments:

Powered by Blogger.