Breaking

1-3-20 முதல் 30-6-20 வரையில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்ற அரசு ஊழியர்கள்/ஒய்வூதியர்கள் செலவு தொகையினை ரொக்கமாக திருப்பிப் பெறலாம்.




1-3-20 முதல் 30-6-20 வரையில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்ற அரசு ஊழியர்கள்/ஒய்வூதியர்கள் செலவு தொகையினை ரொக்கமாக திருப்பிப் பெறலாம்.

     அரசானை 280 நிதி (சம்பளம்) துறை நாள் 24-6-2020 ன்படி அரசு ஊழியர்கள்/உள்ளாட்சி பணியாளர்கள்/ அரசு ஓய்வூதியர்கள் அங்கிகரிக்கப்பட்ட தனியார் மருத்துவ மனைகளில் கொரோனாவிற்கான சிகிச்சை பெற மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டது. 
     அரசானை பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாக அதாவது 1-3-2020 முதல் 30-6-2020 வரையில் அங்கிகரிக்கப்பட்ட தனியார் மருத்துவ மனையில் ரொக்கம் செலுத்தி சிகிச்சை பெற்ற ஊழியர்கள்/ஓய்வூதியர்கள்  அந்த செலவுத் தொகையினை கருவூல கணக்குத் துறைக்கு மனு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த அரசானையில் தெறிவிக்கப்பட்டு இருந்தது.
         கருவூல கணக்கு துறையின் ஆணையாளர் அனைத்து கருவூல அவலர்களுக்கும் அனுப்பியுள்ள தமது கடிதம் நக 15357/NHIS-2/ 2020 நாள் 7-7-20 ன்படி இத்தகையோர் செலவுத் தொகையினை திரும்பப்பெற ஒரு படிவத்தினை நிர்ணயம் செய்து , சம்பந்தப் பட்டவர்கள் அந்த படிவத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கருவூல கணக்கு துறை ஆணையாளருக்கு நேரிடையாக மனு செய்யுமாறு தெறிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.