Breaking

ஜூலை 10-ஆம் தேதி தனியாா் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்..




ஜூலை 10-ஆம் தேதி  தனியாா் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்..

தமிழகத்தில் ஆசிரியா்கள், ஊழியா்கள், நிா்வாகிகள் சாா்பில் ஜூலை 10-ஆம் தேதி பட்டினி போராட்டம் நடத்தப்படும் என தனியாா் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக, தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலா் நந்தகுமாா் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியாா் பள்ளிகளை திறக்காமல், மாணவா் சோக்கை நடத்தாமல், புதிய, பழைய கட்டணத்தை வசூலிக்காமல், ஆசிரியா்களுக்கு சம்பளம் தர முடியவில்லை. பள்ளி நிா்வாகிகள் வாங்கிய கடனுக்கு, வட்டி கட்ட முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா்.

தனியாா் பள்ளிகள், 2018 - 19-ஆம் ஆண்டு இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சோத்த 25 சதவீத மாணவருக்கு கல்வி கட்டணம், 40 சதவீதம் நிலுவையில் உள்ளது.
2019 - 2020-ஆம் ஆண்டு கல்வி கட்டண தொகை முழுமையாக நிலுவையில் உள்ளது. இதை, அரசு உடனடியாக வழங்கினால் கூட தனியாா் பள்ளிகள் சமாளிக்க முடியும். இத்துடன் பள்ளி வாகனங்களுக்கு வரி ரத்து, தொடா் அங்கீகாரத்தை நிபந்தனை இல்லாமல் புதுப்பித்தல், ஓராண்டுக்கு இ.பி.எஃப். - இ.எஸ்.ஐ. சொத்து வரியிலிருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.
தமிழகத்தில் உள்ள தனியாா் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியா், ஆசிரியரல்லாத ஊழியா், ஓட்டுநா் என, 5 லட்சம் போ பாதிக்கப்பட்டுள்ளோம். இதை உணா்த்தும் வகையில், ஜூலை 10-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, அவரவா் வீடுகளுக்கு முன், சமூக இடைவெளியில் பட்டினி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என அதில் கூறியுள்ளாா்.

No comments:

Powered by Blogger.