Breaking

இன்றைய ராசிபலன்கள் (10.07.2020)





இன்றைய ராசிபலன்கள் (10.07.2020)

மேஷம் :
தொழில் ரீதியாக முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும்.எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாக்குவாதத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். மனதில் ஏற்பட்ட சஞ்சலமான எண்ணங்களால் மனக்குழப்பம் ஏற்படும்.

ரிஷபம் :
உயர் பதவியில் உள்ளவர்கள் நிதானத்தை கடைபிடிக்கவும்.மனதில் உள்ள கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். அயல்நாட்டு பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் மந்தத்தன்மை உண்டாகும்.

மிதுனம் :

புதிய தொழிலை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்காலம் சம்பந்தமான புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் அமையும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கை தேவை. இளைய சகோதரர்களின் வழியில் சுபச் செய்திகள் வரும்.

கடகம் :
முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சர்வதேச வணிகத்தில் இலாபம் உயரும். மனைவியிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அலைச்சல்களால் சேமிப்பு அதிகரிக்கும். பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். பூமிவிருத்திக்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள்.


சிம்மம் :
தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கல்வி சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். குறுகிய தூர தொழில் பயணங்களால் மேன்மையான நிலை ஏற்படும்.

கன்னி :
உத்தியோகஸ்தரர்களுக்கு சாதகமான சூழல் அமையும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். தந்தையின் சொத்துகளால் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையை கடைபிடிக்கவும்.

துலாம் :
புண்ணிய காரியங்களுக்கு நன்கொடைகளை வழங்குவீர்கள். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். பொது நலத்திற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும்.

விருச்சகம் :
வாக்குறுதிகளால் புகழ் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கத்தில் கவனத்துடன் இருக்கவும். சொத்து பிரிவினையின்போது பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். வாகனங்களில் கவனத்துடன் செல்லவும்.


தனுசு :
தொழில் சார்ந்த முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். கடனுதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை.

மகரம் :
உத்தியோகஸ்தரர்கள் தங்களது பணிகளை தாமே முடிப்பது நல்லது. தியானம் போன்ற மன அமைதிக்கான எண்ணம் உருவாகும். சுபவிரயம் ஏற்படும். எதிலும் நிதானம் வேண்டும்.மன தைரியத்துடன் செயல்பட்டு தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்வீர்கள்.

கும்பம் :
சாமர்த்தியமான பேச்சுகளால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பூஜை, புனஸ்காரங்களில் மனம் ஈடுபடும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் அமையும். கால்நடைகளினால் இலாபம் அதிகரிக்கும்.

மீனம் :
உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள்.வாகனங்களை கொண்டு தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். அறிந்த கலைகளால் தனலாபம் உண்டாகும்.

No comments:

Powered by Blogger.